வாகை சூடிய மகிழ்ச்சியில் விமல்

2009 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், “2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக `பசங்க’ படமும், 2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக`களவாணி’ படமும், 2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன. மேலும் 2014ஆம் […]

Continue Reading

காவியனுக்கு வாழ்த்து சொன்ன லாரன்ஸ்

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “கா-வியன்” என்றும் தெலுங்கில் “வாடு ஒஸ்தாடு” என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக […]

Continue Reading

தமிழக அரசு விருது உற்சாகமும் பெருமையும் தருகிறது : ஜீவா

தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் ஜீவா தேர்வாகியுள்ளார். 2012ல் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் நடித்ததற்காக அவர் இவ்விருதைப் பெறுகிறார். இது பற்றி நடிகர் ஜீவா பேசும் போது, “ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம். கிடைக்கிற விருது அங்கீகாரம் கலைஞர்களை உற்சாக மன நிலைக்கு இட்டுச் செல்லும். அது மட்டுமல்ல மேலும் […]

Continue Reading

உதய நிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பை கதை’

ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில்  நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும்  ‘ஒரு குப்பை கதை’! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.   மாஸ்டர் தினேஷ்!   கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில  நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர்.  தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர்.   ஒரு குப்பை கதை படத்தின் […]

Continue Reading

தமிழக அரசு வழங்கும் விருது புதிய பலத்தை அளிக்கிறது ! – நடிகர் கரண் உற்சாகம்

தமிழக அரசு விருது புத்துணர்வும் புதிய பலமும்   தருகிறது  என்று நடிகர் கரண் கூறியுள்ளார்.    தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2009 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் கரண் தேர்வாகியுள்ளார்.   2009 -ல்  கரண் நடிப்பில்  வெளியான  ‘ மலையன்  ‘படத்தில்  நடித்ததற்காக அவர்  இவ்விருதைப்  பெறுகிறார்.   இது பற்றி நடிகர்  கரண் பேசும் போது  ” ஒரு நடிகருக்கு  விருது என்பது பல படிகள் ஏறிச் சென்று உயர்ந்த உணர்வைத் […]

Continue Reading

விருது பட்டியலிலேயே இடம் பெறாத முன்னனி நடிகர்களின் படங்கள்

தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த படம் மற்றும் நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது. 6 ஆண்டுக்கான மானியம் பெறும் மற்றும் விருது பெறும் படங்களை ஒட்டு மொத்தமாக நேற்று தமிழக அரசு வெளியிட்டது. வழக்கமாக ஒன்றிரண்டு ஆண்டுக்கான விருது மட்டும் நிலுவையில் இருக்கும். ஆனால் […]

Continue Reading

தமிழக அரசின் விருது மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது – ஐஸ்வர்யா ராஜேஷ்

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 2014ம் ஆண்டின் சிறந்த நடிகையாக ‘காக்கா முட்டை’ படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். விருது அறிவிக்கப்பட்டுள்ள சந்தோஷத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வீடியோ ஒன்றையும் அனுப்பிள்ளார். அறிக்கையில், ‘என் சினிமா வாழ்க்கையில் ‘காக்கா முட்டை’ மறக்க முடியாத படம். நடிக்கும் போதே படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. கதாநாயகியாக நடிக்கும் பலரும் […]

Continue Reading

கவிஞருக்கு கவிதை நடையில் வாழ்த்து சொன்ன சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் இதுவரை 7,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் நாவல்கள், கவிதை தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார். இவர் இன்று தன்னுடைய 62வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதில் இயக்குனர் சீனு ராமசாமி கவிதை நடையில் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இன்று நாட்டுக்கோழிகளும் வெள்ளாட்டு கிடாய்களும் அலறின.. ஜல்லிக்கட்டுகாளைகள் திமிழ்களை நிமிர்த்தி தழுவ அழைத்தன கத்தரிப்பூ பூ […]

Continue Reading

ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி கொடுக்கும் இரட்டை விருந்து

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது, `விக்ரம் வேதா’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில், ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ‘கருப்பன்’ படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா வில்லனாகவும், தன்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் கிஷோர், பசுபதி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் ஒன்று நேற்று […]

Continue Reading

என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது : கமல்ஹாசன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் பேசியதாவது:- என்னை சிறையில் அடைத்துப் பார்க்க சிலருக்கு விருப்பம். முடிந்தால் என்னை கைது செய்தும் பார்க்கட்டும். என்னை […]

Continue Reading