கண்ணகி, காந்தி சிலை வரிசையில் சிவாஜி சிலை

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர். பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. இதனையடுத்து 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி […]

Continue Reading

ஹாலிவுட் படத்தில் இஷ்ரத்தின் தமிழ்ப்பாடல்

ஏ.ஆர்.ரகுமானுக்கு 3 சகோதரிகள், மூத்தவர் ரைஹைனா. இவர் மகன் தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இன்னொருவர் பாத்திமா. கடைக்குட்டி இஷ்ரத் காதரி. இவரும் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசைமைத்து, பாடியிருக்கிறார். இலங்கைத் தமிழரான ராஜ் திருச்செல்வன் அந்த படத்தை இயக்கியிருக்கிறார். அந்த வாய்ப்பு குறித்து கூறிய இஷ்ரத், ”அண்ணன் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிகளில் நான் பாடுவேன். ‘ஐ’ படத்தின் தெலுங்கு வெர்‌ஷனில் என்னோடு நீ இருந்தால் பாடலை பாடி இருக்கிறேன். ஐ.நா.சபையில் அண்ணன் நடத்திய நிகழ்ச்சிக்காக […]

Continue Reading

ரஜினிக்கு நன்றி தெரிவித்த கமல்

மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது. சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் […]

Continue Reading

ஸ்டோன் பெஞ்ச்சில் மெர்க்குரியும், மேயாத மானும்

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், ‘ஸ்டோன் பெஞ்ச்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் பல குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த கட்ட முயற்சியாக, வெள்ளித்திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால் பதிக்கிறார். ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் சார்பில் அவர் 2 படங்களை தயாரிக்கிறார். அதில் ஒரு படத்தின் பெயர், ‘மேயாத மான்.’ இன்னொரு படத்தின் பெயர், ‘மெர்குரி.’ ‘மேயாத மான்’ படத்தில் வைபவ், பிரியாமணி, பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். விது […]

Continue Reading

வரிக்கு வரி சாத்தியமில்லை : விக்ரமன்

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு “நான் யாரென்று நீ சொல்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார். கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான இவர், இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு எடிட்டிங் – பிரேம், பாடல்கள் […]

Continue Reading

மும்பை காலா 12ம் தேதி முதல் சென்னையில்

சங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ஒப்பந்தமாகி, மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரஜினி. அவரைத் தவிர்த்து மற்ற அனைவரும் சென்னை திரும்பி விட்டனர். இந்நிலையில் ‘காலா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 10-ஆம் தேதி முதல் சென்னையில் […]

Continue Reading

முழுக்க முழுக்க 3டி-யில் 2.0

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரம்மாண்டமான படம் ‘2.0’. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டை வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, சைனீஷ், ஸ்பானீஷ், […]

Continue Reading

இதுவே கடைசி, இனிமேல் முடியாது : கேத்தரின் தெரசா

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் கேத்தரின் தெரசா. சமீபத்தில் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்து ‘கடம்பன்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் 2-வது நாயகியாக நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறது. இது தவிர படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி வருகிறார். அடுத்து பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கும் ‘ஜெய ஜானகி நயகா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்து இருக்கிறார். இதற்கு சம்பளம் ரூ.60 லட்சம் என்று […]

Continue Reading

ஜீவா இயக்கும் படத்தில் ஆர்யா

‘கடம்பன்’ படத்தையடுத்து அமீர் இயக்கும் ‘சந்தனதேவன்’ படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவரது தம்பி சத்யாவும், இதில் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் மற்றொரு நாயகனாக ஜெயம்ரவி நடிக்கிறார். அடுத்து ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்திலும் 2 நாயகர்களில் ஒருவராக ஆர்யா நடிக்கிறார். இதில் மற்றொரு ஹீரோ ஜீவா. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’, […]

Continue Reading

என்னைக் கைது செய்தாலும் கவலை இல்லை : டி ராஜேந்தர்

திரைப்படங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியையும், தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியையும் எதிர்த்து லட்சிய தி.மு.க. தலைவரும், சினிமா டைரக்டருமான டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை எதிரில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், சுரேஷ் காமாட்சி, பி.டி.செல்வகுமார், பிரிமுஸ்தாஸ், சவுந்தர், தம்பிதுரை, அமீர், எஸ்.ராஜா உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அனைவரும் கருப்பு கொடியுடன் […]

Continue Reading