விருச்சககாந்துக்கு உதவிய அபி சரவணன்

கடந்த ஒரு வாரமாக காதல் படத்தில் நடித்த ‘விருச்சககாந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார், திரையுலகம் அவரைக் கண்டு கொள்ளுமா என செய்திகள் வந்து கொண்டிருந்தது. கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ‘வேகத்தடை’ குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் ‘விருச்சககாந்த்’ அவர்களையும் அழைத்து வந்து அவருக்குத் தேவையான சில உதவிகளை செய்தார். நேற்றும் ‘உறுதிகொள்’ ஆடியோ விழாவில் ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு ஒரு […]

Continue Reading

இனியாவது மாறுவார்களா? : தங்கர் பச்சான்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிசார் தடியடி நடத்தி கலைத்தனர். இச்சம்பவம் குறித்து, இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலத்தைப் போல, மேலும் பலப்பல கிராமங்களை அழிக்கத் திட்டம் போட்டு முடித்து விட்டார்கள். இனி இதே மாதிரி ஒவ்வொரு கிராமத்திலும் நாம் சென்று போராடிக் கொண்டிருக்க […]

Continue Reading

மத்திய அரசின் திட்டம் போல பிக்பாஸ்

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் “உறுதி கொள்”. கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை […]

Continue Reading

விரைவில்… நான் யாரென்று நீ சொல்

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு “நான் யாரென்று நீ சொல்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார். கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு, பாண்டு, கராத்தே ராஜா, மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு எடிட்டிங் – பிரேம், […]

Continue Reading

சூறாவளியில் இணையும் அபியும், தமனும்

மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள். அந்த வகையில் மலையாளத் திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர் தான் இயக்குனர் குமார் நந்தா. மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான ‘பிரஜூஷா (Prajusha)’ கதையின் நாயகியாக நடிக்கும் […]

Continue Reading

அன்பு அறிமுகமாகும் திரிபுரம்

இந்த உலகை முழுக்க நல்லதாகவே மாற்ற முடியாது. அதேபோல் உலகை முழுக்கவே கெட்டதாகவும் மாற்ற முடியாது என்ற மெசேஜோடு உருவாகி வெளிவரவிருக்கும் படம் திரிபுரம். இந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆகிய வேதமணியிடம் படம் குறித்து கேட்டோம். “ஹாரர், த்ரில்லர், சின்ன மெசேஜுடன் படத்தை எடுத்திருக்கிறோம். கர்மவினை என்பது நம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. நகரத்தில் வாழும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டுகள் தான் படத்தின் கதை. நான் 20 ஆண்டுகளாக திரைத்துறையில் […]

Continue Reading

காதல் தவறானது என சொல்லும் படம்

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “உறுதி கொள்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் வினிகர், எடிட்டிங் – எம்.ஜேபி, பாடல்கள் – மணிஅமுதன், ஸ்டண்ட் – […]

Continue Reading

திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் […]

Continue Reading

பா ரஞ்சித் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கருத்து

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது. “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்.” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைத்தது. ‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான […]

Continue Reading

சாக்‌ஷி அகர்வால் தொடங்கி வைத்த கண்காட்சி

சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேசன் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பிரபல நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனைத் தொடங்கி வைத்த நடிகை சாக்‌ஷி அகர்வால் பேசும் போது, “இந்த கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்களைக் கொண்டு […]

Continue Reading