ரெண்டு கோடிக்கு ஒரு பாட்டு

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.கல்யாண் இயக்கி வரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தின் பாடல் காட்சி ரூ.2 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இதற்காக கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இசையில் உருவான இதற்கான பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, ஹாலிவுட் […]

Continue Reading

ஹிந்திக்கு வாய்ஸ் கொடுக்கும் ரஜினி

ரஜினியின் ‘2.0’ படத்தைப் பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், இந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘2.0’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா’ குறித்து […]

Continue Reading

சன் கையில் சத்யா

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில் யோகி பாபு, சதீஷ், உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் ‘சத்யா’ தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக்தான். படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். வரலட்சுமி […]

Continue Reading

வாய் திறக்காதவர்களின் வாய்களெல்லாம் கதறுகிறது : தங்கர் பச்சான்

இந்தியா முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி குறித்து நடிகரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இதனால் நமக்கு என்ன கிடைக்கும் என நினைத்தால் இதுதான் கிடைக்கும்! விளை நிலங்களை சாகடித்தோம்! நீர் நிலைகள் அழிவதை பார்த்துக்கொண்டே இருந்தோம்! உழவர்கள் கதறினார்கள்! எதைப்பற்றியும் நாம் கண்டுகொள்ளவே இல்லை. அதன் அழிவின் தொடக்கம் தான் நம்மை நோக்கி இப்போது திரும்பியிருக்கிறது. எதற்கும் வாய் திறக்காதவர்களின் வாய்களெல்லாம் இப்போது GST, GST  என கத்துகிறது, கதறுகிறது! […]

Continue Reading

தடைபட்ட தானா சேர்ந்த கூட்டம்

பெங்களூருவில் நடந்த கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன். தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது தமிழர்களுடைய உரிமை. தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.” என்று காரசாரமாக பேசினார். இந்நிலையில், விஷாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Continue Reading

திமிரு பத்தி பேசாதீங்க : வேல்மதி

ஜேஎஸ்கே பிலிம் கார்பரே‌ஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ வி‌ஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அஸ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இத்துடன் ஜேஎஸ்கே பிலிம்ஸ் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினார்கள். விழாவில் பேசிய ஸ்ரேயா ரெட்டி, “இது 9 ஆண்டுகள் கழித்து நான் […]

Continue Reading

அஜித்துக்கு அக்‌ஷராஹாசன் வில்லன்?

அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்தையும் அஜித்தை வைத்து இயக்கி வருகிறார் சிவா. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இப்படத்தில் விவேக் ஓபராய்தான் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இதனை மறுத்து படக்குழுவினரும் எந்த செய்தியும் வெளியிடவில்லை. தற்போது […]

Continue Reading

வேதாளம் கதை கருவுடன் விக்ரம் வேதா

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி, வரலட்சுமி நடிக்கும் படம் ‘விக்ரம் வேதா’. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, “விக்ரமாதித்தன் – வேதாளம் கதையை கருவாக்கி இந்த படத்தை எடுத்துள்ளோம். இதில் மாதவன் போலீசாகவும், விஜய்சேதுபதி தாதாவாகவும் நடித்து இருக்கிறார்கள். மாதவன் தாடி வைத்த கெட்அப்பில் வருகிறார்.” என்றார்கள். மாதவனுடன் நடித்தது பற்றி பேசிய விஜய்சேதுபதி, “இந்த படத்தில் மாதவனுடன் நடித்தது நல்ல அனுபவம். சீனியர் நடிகர் என்று […]

Continue Reading

‘நாகேஷ் திரையரங்கம்’ வெளியிட 50 லட்சம் இழப்பீடு

நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “என்னுடைய தந்தை நாகேஷ், 1958-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். அவர் சென்னை தியாகராய […]

Continue Reading

மோஷன் போஸ்டருக்கு எகிரும் எதிர்பார்ப்பு

நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த ‘சதுரங்கவேட்டை’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார்கள். முந்தைய பாகத்தை தயாரித்த நடிகர் மனோபாலா இப்படத்தையும் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தை இயக்கிய வினோத் இப்படத்திற்கு திரைக்கதை எழுத, நிர்மல் குமார் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி வில்லனாக நடித்து வந்த அரவிந்த்சாமி இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மாறியிருக்கிறார். த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, நாசர், […]

Continue Reading