`2.0′ படத்தின் புரமோஷன் திருவிழா

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ.400 கோடியில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி இருக்கிறது. `2.0′ பட புரமோஷனுக்காக […]

Continue Reading

இவன் தந்திரனில் எனக்கு சவாலான காட்சிகள்

கவுதம் கார்த்திக் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் ‘இவன் தந்திரன்’. இதை கண்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நடித்தது குறித்து கூறிய நாயகி ‌ஷரத்தா, “இயக்குனர் கண்ணன் படம் எனக்கு தமிழில் நாயகியாக நடிக்கும் முதல் படமாக அமைந்திருப்பது பெருமைக்குரியது. இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் வித்தியாசமான பாத்திரம். இதில் நான் கடினமாக உழைத்து முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். இங்கே உள்ள கல்வி முறையும், அதில் இருக்கும் அரசியலும் […]

Continue Reading

ஆதரவற்ற மாணவிகளுக்கு மரகத நாணயம் வழங்கிய ஆனந்தராஜ்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை, நடிகர் ஆனந்தராஜ் ‘மரகத நாணயம்’ படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார். அறிமுக இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி பேண்டசி படம் ‘மரகத நாணயம்’. ஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தில் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த […]

Continue Reading

பலூனில் பறக்கும் புரோமோஷன்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் புதிய படம் ‘2.0’. இப்படத்தில் பாலிவுட் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 100 அடி உயர வெப்பக்காற்று பலூன்களில் இப்படத்தின் புரோமோஷன்களை செய்யவும் முடிவு செய்தனர். அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியிருந்தனர். […]

Continue Reading

ஜூலை 14ல் 88 படம்

A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “88” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், ஜி.எம். குமார், பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா, கடம் கிஷன், மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு : வெற்றிமாறன், இசை : தயாரத்னம், கலை : ஆரோக்கியராஜ், பாடல்கள் : அறிவுமதி, மதன்கார்க்கி, நடனம் : காதல் […]

Continue Reading

மலேசிய கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கிய தோட்டம்

Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு “தோட்டம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார். நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன நடிகையும் நடிக்கிறார். மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்.. ஒளிப்பதிவு – சதீஷ் B சரண், இசை – சாய், பாடல்கள் – நா.முத்துக்குமார், அண்ணாமலை, மாணிக்கசண்முகம், எடிட்டிங் – வினோத், கதை, திரைக்கதை, வசனம் […]

Continue Reading

‘தங்கல்’ வசூலில் புதிய சாதனை

அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்’ படம் ரூ.800 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், இப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த மே மாதம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. சீனாவில் இப்படம் எதிர்பார்த்ததை விட வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. சீனாவில் வெளியான இரண்டு வாரத்தில் அப்படம் ரூ.550 கோடி வசூல் செய்து ரூ.1000 கோடியை தாண்டியது. தொடர்ந்து சீன மக்கள் கொடுத்த வரவேற்பால் அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Continue Reading

ஜி.எஸ்.டி.யால் ரிலீஸ் இல்லை ‘நெஞ்சம் மறப்பதில்லை’

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கஸாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒண்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குளோ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியிடப்போவதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். படத்திற்கான புரோமோஷன்கள் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, பலமுறை இப்படம் வெளியாகும் […]

Continue Reading

ஆனந்த்ராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம்வந்த ஆனந்த்ராஜ் சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மரகத நாணயம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவருடைய கதாபாத்திரமான டுவிங்கில் ராமநாதன் என்ற கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் நடிகராக வலம் வரும் ஆனந்த்ராஜ் இன்னமும் அதே பொலிவுடன் ரொம்பவும் இளமையாக இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களை நேரில் […]

Continue Reading

தாத்தாவாக நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது. சாவித்ரி திரை உலகில் என்.டி.ராமாவாவ் நாகேஸ்வரராவ் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில், என்.டி.ராமராவாக அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. என்.டி.ராமராவ் பல தமிழ் படங்களில் […]

Continue Reading