3வது படத்திற்கு 4 கோடி கேட்ட நயன்தாரா

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இந்த தகவலைப் படத்தின் தயாரிப்பாளர் சி.கல்யாண் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே நயன்தாரா, ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இது அவருடன் நடிக்கும் […]

Continue Reading

அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடிமைப்பெண் திரைப்படம்

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது. இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், […]

Continue Reading

ஏ.ஆர். இசையில் மீண்டும் ஜி.வி.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல் பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். ஏற்கெனவே ‘ஜென்டில்மேன்’ படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரகுமான் இசையில் […]

Continue Reading

அப்பாவின் அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன்

சேலம் 5 ரோடு அருகே உள்ள தியேட்டரில் “இவன் தந்திரன்“ என்ற சினிமா படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக், “இவன் தந்திரம் படம் வருகிற 30-ந் தேதி வெளியாகிறது. இந்த படம் வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வருகிறது. என்ஜினீயரிங் படித்த மாணவர்களின் கதை தான் “இவன் தந்திரன்”. என்னுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார். […]

Continue Reading

143 டைட்டிலுடன் ஒரு படம்

Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படம் “143”. காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்படுவது “143”. அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே அது. இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி. புதுமுகம் ரிஷி எழுதி, இயக்கி நடிக்க, நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். அனுபவ நடிகரான […]

Continue Reading

புலியிடம் இருந்து தப்பிய மேல் நாட்டு மருமகன்

இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா, இசை – வே.கிஷோர் குமார், படத்தொகுப்பு – விஜய் கீர்த்தி. இவர் பிரபல எடிட்டர் ராஜ்கீர்த்தியின் மகன் ஆவார். கலை – ராம், நடனம் – சங்கர், பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ், தயாரிப்பு […]

Continue Reading

விஜய்யின் மெர்சலான அதிரிந்தி

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படமான `மெர்சல்’ படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மெர்சல் படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். […]

Continue Reading

பிரம்மாண்ட கூட்டணியில் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் இளைஞர்களைக் கவரும் வகையில் படங்களை இயக்கும் இயக்குநர்களுள் வெங்கட் பிரபுவும் ஒருவர். அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததோடு, வசூல் ரீதியாகவும் நல்லபடியாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது `களவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் `ஆர்.கே.நகர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ், […]

Continue Reading

படத்திற்கு படம் வெரைட்டி காட்டும் தன்ஷிகா

ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் தன்ஷிகா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘உரு’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்து வரும் தன்ஷிகா கூறும்போது, ‘உரு’ கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு நடந்த இடம் கொடைக்கானல். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு அதனால் அங்கு குளிர் எங்களை பாடாய் படுத்தியது. மன உறுதியுடன் ஒட்டுமொத்த […]

Continue Reading

சர்வைவா முடிச்சிட்டு செர்பியா போயாச்சு

அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஹிப் ஹாப் பாடகர் யோகி-பி பாடிய ‘Surviva’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத பட்சத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ‘விவேகம்’ படக்குழு செர்பியா சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் […]

Continue Reading