தமிழில் வெளியாக இருக்கும் எக்ஸ் வீடியோஸ்

ஆபாச இணையதளத்தின் பெயரில் உருவாகும் தமிழ்ப்படம் “எக்ஸ் வீடியோஸ்” ஆமாம் இது ஆபாசப் படம் தான் என்று தைரியமாகக் கூறுகிறார் “எக்ஸ் வீடியோஸ்” படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர். “மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது. பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை.” என்கிறார் இயக்குநர். மேலும், “இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, […]

Continue Reading

சிம்புவுக்கு வந்த சோதனை

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பாவன் அசராதவன் அடங்காதவன்’ இன்று (ஜூன் 23) வெளியாகவிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தார்கள். காலையில் திரையரங்கிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. KDM எனப்படும் QUBE KEY வராததால், காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக திரையரங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் மட்டுமே பிரச்சினை எழுந்துள்ளது. காலை 10 மணிக்கு வங்கி திறந்தவுடன், QUBE பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு KDM அனைத்து திரையரங்குகளுக்கும் சென்றடையும் என்று […]

Continue Reading

கனவு நனவான மகிழ்ச்சியில் மயில்

தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களில் நடித்தார். இப்போது ஸ்ரீதேவி ‘மாம்’ (அம்மா) என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி […]

Continue Reading

ஆசையை நிறைவேற்றிய மைம் கோபி

தமிழ் சினிமாவில் `துரோகி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மைம் கோபி. அதனைத் தொடர்ந்து `வாயை மூடி பேசவும்’, `மெட்ராஸ்’, `மாரி’, `கபாலி’, `பைரவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் மக்களைக் கவர்ந்து வரும் மைம் கோபி, தற்போது பார்வையற்ற மாணவர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். அதாவது, பார்வையில்லாத 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச் சென்று, அவர்களின் விமானத்தில் பயணம் செய்யும் ஆசையை நிறைவேற்றி […]

Continue Reading

2.0 ஆடியோ, ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரம்மாண்டமான படம் ‘2.0’. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக ரஜினி தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு அடுத்ததாக ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து படத்தை மெருகூட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு […]

Continue Reading

அஅஅ ரிலீசுக்கு தடையில்லை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உலகம் முழுவதும் நாளை முதல் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ஏஏஏ படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு நாளை (ஜுன் 23) ரிலீசாகிறது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா, சானா கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். […]

Continue Reading

தளபதியின் மெர்சல் – ஒரு பார்வை

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 61’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 அன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அதன்பின்னர் ஒருநாள் முன்னதாகவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் ரொம்பவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் […]

Continue Reading

இரட்டிப்பு மகிழ்ச்சியில் மாளவிகா

தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி” படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றதன் மூலம் டிஜிட்டல் சினிமா மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியவர் இயக்குனர் ஆதிராஜன். தற்போது இவர், ஒரு கபடி வீரனின் காதல் கதையை, கௌரவக் கொலை சம்பவங்களின் பின்னணியில் எழுதி இயக்கி வருகிறார். இதில் கபடி வீரர் ராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். இவர் பிரம்மா படத்தில் சசிகுமார் தங்கையாகவும், இவன் வேற மாதிரி படத்தில் […]

Continue Reading

சௌந்தரராஜா ஹேப்பி அண்ணாச்சி!

‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா. அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, திரைப்படம் கதாநாயகன் புரமோஷன் கொடுத்தது. சௌந்தர ராஜா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் திரைப்படம், ‘ஒரு கனவு போல’ வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதற்கு முன்னால் சௌந்தர ராஜா வில்லனாக நடித்திருக்கும், ‘தங்க ரதம்’ திரைப்படம் வெளியாகி அவருக்கு பெரு மகிழ்ச்சியை […]

Continue Reading

விஜய்-61 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் மாற்றம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியில் படக்குழுவினர் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது விஜய் பிறந்தநாளுக்கு ஒருநாள் […]

Continue Reading