3 பேரை கைது செய்ய தடை

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான ‘டிரைலர்’ காட்சிகளும் வெளியானது. இதையடுத்து, இந்த திரைப்படத்தைத் தடைசெய்யும்படி, சென்னை போலீஸ் கமிஷனரிடம், சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், அந்த திரைப்படத்தின் இயக்குனர் […]

Continue Reading

என் வழியில் என் மகன் : மம்முட்டி

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்‘, ‘பெங்களூர் டேஸ்’, ‘சார்லி’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றிகளை வாரிக் குவித்துள்ளன. இவர் நடிப்பில் கால் பதிக்கும் முன்னரே, திருமண வாழ்க்கையில் காலெடுத்து வைத்து விட்டார். இந்நிலையில், நடிக்க வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு ஏன் திருமணம் செய்து வைத்தோம் என்பது குறித்து பதில் அளித்துள்ள மம்முட்டி, “ஒரு மனிதனின் வாழ்க்கையில் உறுதியான நிலையை ஏற்படுத்துவது திருமணம் தான். […]

Continue Reading

வெற்றிக்கூட்டணியில் இணைந்தார் சிம்ரன்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறது. இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். காமெடி வேடத்தில் வழக்கம் போல் சூரியே நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும், நெப்போலியனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், […]

Continue Reading

அஜித்தின் சாதனைகள் சொல்லும் பாடல்

அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் […]

Continue Reading

குரங்கு பொம்மை டிரைலர் வெளியிட்டார் முருகதாஸ்

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், டீசரை ஆர்யாவும் வெளியிட்டார்கள். சமீபத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் பாடல்களை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று இயக்குநர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டிரைலரை வெளியிட்டார். படத்தின் […]

Continue Reading

பாலகிருஷ்ணா நடிப்பில் பிரமாண்டமான சரித்திரப் படம்

எதைச் சொன்னாலும் பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம். அதற்கு உதாரணம் பாகுபலி படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான இன்னொரு பிரமாண்டமான படம் தான் “ கெளதமி புத்ர சாதகர்ணி”. ஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் 100 வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது. ரகுநாத் வழங்கும் […]

Continue Reading

முதலில் டாக்டர், அப்புறம் தான் ஆக்டர் : ஷிவானி

இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு “ இது தாண்டா போலீஸ்” போன்ற பல வெற்றிப் படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் Dr. ராஜசேகர் மற்றும் “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு” போன்ற வெற்றி படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகையான ஜீவிதாவின் மகள் ஷிவானி. ஷிவானி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அது குறித்து அவர், “அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன […]

Continue Reading

மீண்டும் வெற்றிக்கூட்டணியில் அதர்வா

மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் ஈட்டி. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் நாடோடிகள், ஈட்டி மற்றும் மிருதன் போன்ற தரமான கதைகளையும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறது. தரமான வெற்றி படங்களை கொடுக்கும் இந்நிறுவனம் தற்போது சிம்பு நடித்து வரும் AAA படத்தையும் மற்றும் தன் 10-வது படமான, ஜீவா – […]

Continue Reading

பேய் உருவில் இருக்காது, ஆனால் திகில் இருக்கும்

வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து வரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் விக்கி ஆனந்த் கூறியதாவது, உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. கதைப்படி […]

Continue Reading

பா.ஜா.கா வில் இணைந்தார் ஜித்தன் 2 இயக்குனர் 

ஜித்தன் 2 படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும், கிரிங் கிரிங், 1.AM போன்ற படங்களை இயக்கியவர் ராகுல். இவர் இன்று (13.06.2017 )  காலை தியாகராயா நகரில் உள்ள பா.ஜா.கா அலுவலகத்தில் தமிழ் மாநில  தலைவர் திருமதி.தமிழிசை சொந்தராஜனை நேரில் சந்தித்து பா.ஜா.காவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  

Continue Reading