இசையமைப்பாளர் இமானிடம் பாராட்டை பெற்ற செந்தில் குமரன்

தமிழர்கள் பெரும்பாலானோர் உலகம் முழுவதும் சென்று வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்தாலும் தமிழர்கள் என்ற உணர்வோடு பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். அப்படி தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்றவர் தான் செந்தில் குமரன். யார்க் யூனிவர்சிட்டியில் பி.ஏ. படித்த இவர், தற்போது கனடாவில் மார்கெட்டிங் பிசினஸ் செய்து வருகிறார். தமிழ் மொழி மீதும், பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட செந்தில் குமரன், 2003ம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 2004, […]

Continue Reading

15 வருடத்திற்குப் பிறகு இணையும் சரத்குமார் – நெப்போலியன்

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சென்னையில் ஒரு நாள் -2’. சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் படக்குழுவினர் இப்படத்திற்கு சென்னையில் ஒரு நாள் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், […]

Continue Reading

விஜய் சேதுபதி விலகியதால் அமீர்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கருணாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் முதல் 45 நிமிடங்கள் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும். இதற்கான படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது […]

Continue Reading

எதை வேண்டுமானாலும் செய்வேன் : விஷால் ஆவேசம்

சென்னையில் பரபரப்பைக் கிளப்பிய நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது தமிழ் சினிமாவாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கிறார். ‘உளவுத்துறை’ படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டில் நடிகர் விஷால், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் விஷால் பேசும்போது, இன்றைக்கு சினிமாவை ஆபத்து பல வழிகளில் சூழ்ந்துள்ளது. அதைத் தடுப்பதற்காகத்தான் சினிமாவை நிறுத்தி வைப்போம் என்று முடிவு எடுத்தோம். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு […]

Continue Reading

ஆரம்பமே அமர்-களம் – காலாவுக்கு வந்த சோதனை

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் ‘காலா’ பட கதை, தலைப்பு தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ‘GSR விண்மீன் கிரியேஷன் மூலம் 21-4-1996 முதல் south indian film chamber of commerce பதிவு அலுவலகத்தில் ‘கரிகாலன்’ என்ற தலைப்பை […]

Continue Reading

கூத்தன் படத்துவக்க விழா

நீல்கிரிஸ் எண்டர்டைமென்ட் நீல்கிரிஸ் முருகன் தயாரிக்கும் முதல் படம் “கூத்தன்”. இந்த படத்தின் படத் துவக்கவிழா மற்றும் பூஜை இன்று காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் “QUBE” சினிமா நிறுவனர், களத்தூர் கண்ணம்மா தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் மருமகனுமான அருண் வீரப்பன் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் ராஜ்குமார். மேலும் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), ஊர்வசி, மனோபாலா, பாக்யராஜ், கவிதாலயா கிருஷ்ணன், […]

Continue Reading

கால்ஷீட் கொடுக்காத அனுஷ்கா, காத்திருக்கும் இயக்குநர்

‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா மிகவும் பிரபலமாகி விட்டார். அவரை இந்தி பட உலகத்துக்கு இழுக்க பல முன்னணி டைரக்டர்கள் போட்டி போடுகிறார்கள். பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அனுஷ்கா எதையும் ஏற்கவில்லை. இந்த நிலையில், டைரக்டர் நிவாஸ் இயக்கும் ‘ஜுவலைல்’ என்ற இந்தி படத்துக்கு அனுஷ்காவிடம் கதை சொல்லப்பட்டது. அனுஷ்கா கதை பிடித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். என்றாலும் இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை. ஆனால், “இந்த படத்திற்கு அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்த பிறகே படத்தைத் தொடங்குவேன். […]

Continue Reading

படமானது சுவாதி கொலை வழக்கு

ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு `சுவாதி கொலை வழக்கு’ என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் படமாக இயக்கி இருக்கிறார். இவர் விஜயகாந்த் நடித்த `உளவுத்துறை’, அருண் விஜய் நடித்த `ஜனனம்’ மற்றும் `வஜ்ரம்’ படங்களை இயக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாதி கொலை வழக்கு படத்தில் சுவாதியாக ஆயிரா நடித்துள்ளார். மனோ என்ற புதுமுகம் ராம்குமார் வேடத்திலும், ஏ.வெங்கடேஷ் என்பவர் ராம்ராஜ் […]

Continue Reading

விலகல் ஏன்? விளக்கமளித்த ஸ்ருதிஹாசன்

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஆகியோர் நடிக்க இருப்பதாக இருந்த இப்படத்தில் இருந்து, சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனால் தொடர முடிய வில்லை என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இன்று தன் அறிவிப்பை வெளியிட்டது. அதுகுறித்து ஸ்ருதிஹாசன் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் […]

Continue Reading

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகல்

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகி இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனால் தொடர முடிய வில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். சமீபத்தில் பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Continue Reading