யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது : கமல்

கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்பது தான் என்னுடைய கருத்து. நான் 21 வயதிலேயே அரசியலுக்குள் வந்துவிட்டேன். ஆனால், போட்டி அரசியலுக்குள் வரவில்லை. […]

Continue Reading

‘எனக்குள் ஏதோ’ – புதுவிதமான ஹாரர் கதை

நடிகர் ‘பிரின்ஸ்’ தயாரித்து நடிக்கும் படம் ‘எனக்குள் ஏதோ’. இந்த படம் இன்று சென்னை பனையூரில் உள்ள ஷூட்டிங் ஹவுசில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. “எனக்குள் ஏதோ” திரைப்படம் புதுவிதமான ஹாரர் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் “பிரின்ஸ்” கதாநாயகனாக அறிமுகமாகிறார். மனம் கொத்திப் பறவை ஹீரோயின் ஆத்மியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ‘ஒரு டைரக்டரின் காதல் டைரி’ படத்தின் ஹீரோயின் ஸ்வாதி இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குனர் நடிகர் சிங்கம் […]

Continue Reading

சிவகார்த்திகேயன், அனிருத்தை தொடர்ந்து சிம்பு

‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’, ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ‘ரங்கூன்’ படத்தை தயாரித்து வருகிறார். கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை அனிருத் வெளியிட்டார். இந்நிலையில், அடுத்த பாடலை சிம்பு நாளை மாலை 5 […]

Continue Reading

படமாகும் இரண்டாம் ஊழம். முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா

மலையாளத்தில் மூத்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவநாயர் எழுதிய ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி உருவாக உள்ள மகாபாரதக் கதையை ரூ.1000 கோடி செலவில் பி.ஆர்.ஷெட்டி என்பவர் படமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும், படத்திற்கான ப்ரீ புரோடக்‌ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க படத்திற்கான திரைக்கதையும் வேகமாக தயாராகி வருகிறது. ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில், மகாபாரத் கதையில் வரும் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், தெலுங்கில் […]

Continue Reading

‘காலா’வின் மிரட்டலான முதல் பார்வை

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘காலா’ என்று இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ‘கபாலி’ படத்தில் கபாலீஸ்வரன் என்ற பெயரை எப்படி ‘கபாலி’ என்று அழைத்தார்களோ, அதேபோல் இப்படத்தில் கரிகாலன் என்ற பெயரை சுருக்கி ‘காலா’ என்ற பெயரில் தலைப்பாக வெளியிட்டுள்ளார்கள். தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி, ‘காலா’ படத்தின் 2 பர்ஸ்ட் […]

Continue Reading

“கபர்தார்” – ரசிகர்களுக்கு ரஜினியின் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை, கடந்த மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை, கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டார். ரஜினியின் கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டன. ரஜினிக்கு எதிராக போராட்டமும் நடந்தது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் குதித்தனர். ரஜினியை எதிர்ப்பவர்களின் கொடும்பாவியை […]

Continue Reading

புன்னகையைப் பதிலாய்த் தந்த தனுஷ்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ரஜினி, “ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு பச்சை தமிழன். இங்கே அரசியல் சிஸ்டம் சரியில்லை.” என்று கூறினார். ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் […]

Continue Reading

அறிமுக இயக்குனரின் சரித்திரப் படத்தில் ராகவா லாரன்ஸ்

கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான `சிவலிங்கா’ போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 18-19-ஆம் நூற்றாண்டு பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் புதிய படத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை `த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனம் சார்பில் தற்போது அதர்வா – […]

Continue Reading

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீனு ராமசாமி

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இந்நிலையில், சமீபத்தில் சீனுராமசாமி, இயக்குனரும் நடிகருமான சசிகுமாரை சந்தித்துள்ளார். அவரிடம் ஒரு கதையையும் கூறியுள்ளாராம். அதில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சீனுராமசாமி கூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார். சசிகுமாருக்கு சீனு ராமசாமி சொன்னது புதிய கதையா? […]

Continue Reading

பிரபல சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் மரணம்

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே…’ என்ற பாடல் எழுதியதின் மூலம் பிரபலமானவர், பாடலாசிரியர் நா.காமராசன். ரஜினிகாந்த் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது…’, ‘தங்கமகன்’ படத்தில் ‘அடுக்கு மல்லியே…’, பாலுமகேந்திரா டைரக்டு செய்த ‘மறுபடியும்’ படத்தில் ‘ஆசை அதிகம் வச்சு…’ உள்பட 600-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் எழுதி இருந்தார். ஏராளமான புதுக்கவிதைகளை எழுதி, பல விருதுகளை பெற்று உள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசவைக் […]

Continue Reading