தலைவர்164 படத்தின் டைட்டில் வெளியீடு

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா என படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். […]

Continue Reading

இசைக் கடலில் காலை நனைக்கும் அல்போன்ஸ் புத்ரன்

`நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதைத் தொடர்ந்து `பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட `பிரேமம்’ படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை […]

Continue Reading

ராங் நம்பரை அழைத்து விட்டார்களோ?… சன்னிலியோன் சந்தேகம்

இந்தி பட உலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னிலியோன். இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி கூறிய அவர், “இந்தி நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த நடிகர்களை அவர்களுடைய மனைவிமார்கள் மிரட்டி வைத்திருப்பதுதான் என்று கேள்விப்படுகிறேன். அவர்களிடம் உங்கள் கணவர்கள் எனக்கு தேவை இல்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு தங்கமான கணவர் இருக்கிறார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் என் தேவைகள் அனைத்தையும் முழுமையாக, […]

Continue Reading

ஷணமே சத்யா : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, ‘சத்யா’ என்ற தலைப்பே மிகவும் பவர்புல்லான ஒரு தலைப்பு. கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து […]

Continue Reading

சூப்பர்ஸ்டார் பாணியில் சிவகார்த்திகேயன்

ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு பெற்ற ‘தனிஒருவன்’ படத்துக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. 2-ம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. ஏப்ரல் 25-ந்தேதி ஆரம்பமான இந்த படப்பிடிப்பு 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று முடிவடைந்தது. மோகன்ராஜா ஏற்கனவே இயக்கிய ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘தில்லாலங்கடி’ ஆகிய படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது […]

Continue Reading

கேரள மண்ணிலும் தமிழீழ உணர்வை வெளிப்படுத்திய அபி சரவணன்!

கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன். வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார். ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை. மதுரை தமுக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவு பகல் பாராமல் 7 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டதோடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று […]

Continue Reading

சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக ஸ்ருதி!

ஆகஸ்டில் வெளிவரவுள்ள தனது சங்கமித்ரா பிரம்மாண்ட படத்திற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு முறை தோன்றிய ஸ்ருதிஹாசன், நீல் கெய்மேன் சிறுகதையை ஒட்டி உருவான “ஹௌ டு டாக் டு கேர்ள்ஸ்” நிகழ்ச்சியின் ப்ரீமியரில் நாவலாசிரியரான நீல் கெய்மனின் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நீல் கெய்மன், ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த நாவலாசிரியர் ஆவார். ட்விட்டர் வழியாக அறிமுகமான அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் சந்தித்தனர் மற்றும் தொடர்பில் இருந்தனர். ஸ்ருதிஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகிறார் என்பதை அறிந்த […]

Continue Reading

பேரரசு புத்தக வெளியீட்டு விழா, பாரதிராஜா பரபரப்புப் பேச்சு

இயக்குனர் பேரரசு எழுதிய ‘என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், “முன்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஜன கண மன பாடிவிட்டார்களா என்று நிகழ்ச்சி முடிந்ததை குறிப்பிடுவார்கள். இப்போது முதலில் ஜன கண மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா? தமிழ் […]

Continue Reading

பேரணி நடத்திய ரஜினி ரசிகர்கள்

தமிழக மக்களால் “சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் தற்போது பெரிய தலைவர்கள் யாரும் இல்லாமல் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல் ரஜினி ரசிகர்களும் “தலைவா… அரசியலுக்கு வா.. தலைவா […]

Continue Reading

‘தங்கல்’ – சீன வசூலில் புதிய சாதனை

சமீபகாலமாக சீனாவில் இந்தியப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே சீனாவில் திரையிடப்பட்ட அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ ஆகிய படங்கள் நன்றாக ஓடின. இப்போது அவரது ‘தங்கல்’ படத்துக்கும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட இந்திய படங்களின் சாதனையை இது முறியடித்து வசூல் ரூ.500 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ தான் சாதனை படைத்து முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு […]

Continue Reading