தேஜூவை இயக்கும் கங்கணா

கங்கனா ரணாவத் இந்திப்பட உலகின் துணிச்சலான நடிகை. இவர் தற்போது ‘சிம்ரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது, செப்டம்பர் 15-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை ஹன்சன் மேத்தா இயக்கி இருக்கிறார். கங்கணா அடுத்ததாக ‘தேஜூ’ என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி கூறிய கங்கனா ரணாவத்…. ‘‘நான் ‘தேஜூ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘தேஜூ’ படத்தின் வேலைகள் தொடங்க இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும். […]

Continue Reading

சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரண்ட்

கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடகங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர். நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டனக் கூட்டம் நடத்தினர். அந்த […]

Continue Reading

டுவிட்டரில் `விஸ்வரூபம்-2′ குறித்து புதிய தகவல்

கமலஹாசன் இயக்கத்தில் அவரே நடித்து, கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’. இரு பாகங்களாக உருவாகி வந்த இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது. இந்நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களால் `விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாவது பாகம் கிடப்பில் போடப்பட்டதால், கமல் `உத்தம வில்லன்’, `பாபநாசம்’, `தூங்காவனம்’ உள்ளிட்ட படங்கள் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, `சபாஷ் நாயுடு’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம்’ […]

Continue Reading

100-வது படத்தில் விஜய் – சமந்தா

சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து கொடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதன்படி, தற்போது விஷாலுடன் ‘இரும்பு திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கண்கள்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுன் மாதத்தில் சமந்தா […]

Continue Reading

சங்கமித்ராவுக்கு திரைக்கதை எழுதும் வெற்றிக்கூட்டணி

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா’. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படம், பிரான்சில் நடைபெற்று வரும் 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள `சங்கமித்ரா’ படக்குழு, அங்கு சங்கமித்ராவை அறிமுகம் செய்து, சில போஸ்டர்களையும் வெளியிட்டது. இதில் சுந்தர்.சி., ஹேமா ருக்மணி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. […]

Continue Reading

கின்னஸில் பதிவான ‘புலிமுருகன்’ சிறப்பு காட்சி

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் வசூலிலும், மலையாளத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை படைத்தது. ரூ.150 கோடி வரை இப்படம் மலையாளத்தில் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், இப்படத்தை அதே பெயரில் தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வெளியிடவுள்ளனர். மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை தயாரித்த முலக்குபாடம் பிலிம்ஸ் நிறுவனமே தமிழிலும் இப்படத்தை உருவாக்குகிறது. இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் மற்றும் […]

Continue Reading

தயாரிக்க முன்வந்த லைக்கா, தள்ளிப்போடும் கமல்!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். இந்த திரைப்பட விழாவில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர். தற்போது, இந்த திரைப்பட விழாவில் கமலின் ‘மருதநாயகம்‘ படத்தின் போஸ்டர்களையும் […]

Continue Reading

கோவாவில் இல்லை… அமெரிக்காவில்!

`விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா, அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `யே மாயா சேசவா’ படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ள சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நாக சைதன்யாவுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ள சமந்தா – நாக தைன்யா. `மனம்’ படத்தில் நடிக்கும் போது […]

Continue Reading

`விஐபி 2′ சிறப்பு பாடல் விரைவில்

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படிப்பிடிப்பு முடிந்ததால், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் […]

Continue Reading

26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமிதாப் – ரிஷி கூட்டணி

பாலிவுட்டின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இணைந்து `102 நாட் அவுட்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் உமேஷ் சுக்லா இயக்கி வரும் அந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சுமார் 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் – ரிஷி மீண்டும் இணைந்து நடிப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த பாசப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், 102 வயது […]

Continue Reading