தமிழ் மொழிக்கு சமர்ப்பணம் : சுந்தர் சி

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா’. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா அடுத்த வாரம் (மே 18-ல்) பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101-வது படமாக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. […]

Continue Reading

தமிழக கட்சித் தலைவர்கள் குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக இன்றும் ரசிகர்களை சந்தித்து வருகின்றார். அப்போது ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அதிரடியாக கூறியுள்ளார். அதில், “45 ஆண்டுகாலமாக என்னை வாழ வைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சைத் தமிழன்; என்னைத் தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள். எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளது. அரசியல் […]

Continue Reading

மன அழுத்தத்திற்கு பாராட்டுகளே மருந்து : சமந்தா

நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், “பெண்கள் மன அமைதியை கெடுப்பவர்கள்” என்று நாக சைதன்யா வசனம் பேசி இருக்கிறார் என்றும் உங்களால் அவர் மனஅமைதி கெட்டுப்போய் இருக்கிறாரா? என்றும் என்னிடம் பலர் கேட்கிறார்கள். சினிமாவில் பேசும் வசனத்துக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது வசனத்தில் குறிப்பிடும் பெண்கள் வேறு. நாக சைதன்யா மனம் நிறைய நான்தான் இருக்கிறேன். எனக்கும் அவருக்குமான காதல் வாழ்க்கை […]

Continue Reading

ரஜினி அரசியல் பற்றி தடாலடி கருத்து தெரிவித்த நீதிபதி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டரில் […]

Continue Reading

பிரபல இந்தி நடிகை மரணம்

இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்த ரீமா லாகு, இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட ரீமாவை அவரது குடும்பத்தார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலன் இன்றி அதிகாலை 3.15 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார். 59 வயதாகும் லீமா லாகு, திரைப்படங்கள் மட்டும் இன்றி பல தொலைக்காட்சி […]

Continue Reading

தமிழ் திரைப்பட வர்த்தகசபை தலைவராக அபிராமி ராமநாதன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தகசபை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான அபிராமி ராமநாதன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.தாணு, பட அதிபர்கள் அன்புசெழியன், டி.சிவா, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர்கள் அருள்பதி, செல்வின்ராஜ், திருப்பூர் சுப்பிரமணியம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் […]

Continue Reading

சமுத்திரகனியின் மலையாளப் படத்தில் தன்ஷிகா

dhan `கபாலி’ படத்தில் ரஜினி மகளாக தன்ஷிகா நடித்த பிறகு, அவருக்கு, பல்வேறு படங்களில் விதம் விதமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த `எங்க அம்மா ராணி’ படத்தில் 2 குழந்தைகளின் தாயாக நடித்தார். தற்போது மலையாள, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாபல் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார். […]

Continue Reading

நடிகை ரூபிணியின் தாயார் காலமானார்

1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரூபிணி. இவரின் தாயார் இன்று மும்பையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விஜயகாந்தின் ‘கூலிக்காரன்’, ‘ ரஜினியின் ‘மனிதன்’, கமல்ஹாசனுடன் ‘மைக்கல் மதன காமராஜன்’ என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியகாக ரூபிணி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக ‘தாமரை’ என்ற தமிழ்ப் படத்தில் […]

Continue Reading

தமிழ் திரைப்பட வர்த்தக சபை உதயமானது

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை இன்று உதயமானது. பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமாகிய திரு அபிராமி ராமநாதன் அவர்கள் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Continue Reading

ஹரியின் அடுத்த படத்தில் டி.எஸ்.பி

   சாமி 2க்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீபிரசாத். புலி , இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் சாமி 2 படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்க நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஜுலை மாதத்தில் இதன் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் ஏற்கனவே ஹரி இயக்கிய சிங்கம் […]

Continue Reading