மீண்டும் சீதையாக நயன்தாரா?

சரித்திரக் கதை பின்னணியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் தயாரான `பாகுபலி-2′ படம் உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. தொடர்ந்து இந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் குவிவதால் ரூ.1,500 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உலக அளவில் வசூலில் சாதனை புரிந்த முதல் இந்திய படம் என்ற பெருமையை `பாகுபலி-2′ பெற்று இருக்கிறது. […]

Continue Reading

பரோட்டா மாஸ்டர் ஆன யுவன்!

இயக்குனர் பாலா தற்போது, ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்து பாலா இயக்கும் படத்தில் பெரோஸ்கானின் மகன் ‘சாட்டை’ யுவன் நாயகனாக நடிக்கிறார். அதில் பரோட்டா கடையில் வேலை பார்க்கும் வேடம். இதற்காக அவரை பரோட்டா போட கற்றுவருமாறு பாலா கூறினார். இதையடுத்து, யுவன் நாகூர் சென்று ஒரு பரோட்டா கடையில் ஒரு மாதம் பரோட்டா போட கற்று வந்திருக்கிறார். கடைக்கு வந்து போகிறவர்களிடம் அவர் யார் என்பதை சொல்லாமலே இதை செய்து முடித்திருக்கிறார். […]

Continue Reading

கவனம் ஈர்க்கும் `விவேகம்’ டீசர்

சிறுத்தை சிவா – தல அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் அதிகாரியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்’ படத்தின் டீசர், எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு 12.01 மணிக்கு யூ டியூப்பில் […]

Continue Reading

அதர்வாவுடன் பிரபாகர் ஒத்தைக்கு ஒத்தை

அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘அட்டு’. இது வடசென்னை குப்பைமேட்டு பின்னணி கதை. இந்த படத்தில் நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் நடிகர் பிரபாகர். படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அவர்… “சினிமா ஆர்வம் என்னைப் பாடாய் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். அது மறக்க முடியாத அனுபவம் என்றாலும், தமிழில் நல்ல வாய்ப்புக்காகவே நீண்ட நாள் காத்து இருந்தேன். அப்படி ஒரு […]

Continue Reading

கான்ஸ் பட விழாவில் சங்கமித்ரா அறிமுகம் – ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான சங்கமித்ரா திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களைக் கவரும் கதைக்களம் கொண்ட சங்கமித்ரா படம் கான்ஸ் பட விழாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி தனது அடுத்த படமான சங்கமித்ராவை பிரம்மாண்டமான முறையில் உருவாக்குகிறார். 8 ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை விவரிக்கும் […]

Continue Reading

இசைப்புயல் இயக்கும் இன்னொரு படம்?

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீமஸ்க்’ என்ற படத்தை ‘விர்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இசை அமைப்பாளராக சாதனை படைத்து ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட்டிலும் இசை அமைத்தார். இப்போது இயக்குனர் ஆகி இருப்பது குறித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான், “25 வருடங்களுக்கு முன்பு ‘ரோஜா’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன போது எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். அப்போது மணிரத்னமும், […]

Continue Reading

சினிமா வேலை நிறுத்தம், ஜெயம் ரவி படத்துக்கு பிரச்சினையா?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி – சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பிராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் 50-வது படமான `வனமகன்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் […]

Continue Reading

ஒரு பிரபலத்தின் வாழ்க்கையைப் படமாக்கும் இரண்டு இயக்குநர்கள்

கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ் லீ. அவரது படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அவரைப் போன்ற ஒரு வீரன், கலைஞன், நடிகன் உலகத்தில் இன்னமும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதும் இல்லை என்னும் அளவுக்கு தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கிறார் புரூஸ்லீ. அதாவது அவர் விட்டுச் சென்ற […]

Continue Reading

விரைவில், திரையில் விஐபி-2

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் என […]

Continue Reading

தண்ணீருக்குள் புதிய அவதாரம்

கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் ‘அவதார்’. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும் ‘அவதார்’ முறியடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]

Continue Reading