ஒரு கிடாய்க்கு கிடைத்த சர்வதேச பாராட்டு

ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சங்கையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதையில், வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு போகப்படுகிறது. […]

Continue Reading

காஷ்மீர்… அவலாஞ்சி… ரங்கா படக்குழு!

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் `ரங்கா’ படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சிபிராஜ் – நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். எனினும் அதற்கான சூழ்நிலை, அரசியல் ரீதியாகவும் இல்லை. பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் அச்சுறுத்திய நிலையில், காஷ்மீரில் படப்பிடிப்பை வெற்றிகரமாக […]

Continue Reading

அர்ஜூனின் 150வது பட டீசர் விரைவில்

சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் “நிபுணன்”. நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், அர்ஜூன் நடிக்கிறார். கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயரப் பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் […]

Continue Reading

விஜய் சேதுபதி, திரிஷாவை தேடும் படக்குழு

மெட்ராஸ் என்டர் பிரைசஸ் எஸ். நந்தகோபால் அடுத்து தயாரிக்கும் படம் ‘96’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சி. பிரேம்குமார் இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கி கொடுத்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி வெளியானது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் கும்பகோணம் […]

Continue Reading

“Be Careful. நான் என்னைச் சொன்னேன்” : அஸ்வின்

‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு ‘திரி’ படத்தில் ‘சுப்பிரமணியபுரம்’ சுவாதியுடன் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதுபற்றி கூறிய அவர்… ‘‘கல்லூரி முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் ஒரு இளைஞனை, அந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் பாதிக்கிறது. அது எந்த மாதிரி பிரச்சினையை சந்திக்க வைக்கிறது என்பது தான் ‘திரி’ படத்தில் என் பாத்திரம். இது அப்பா மகன் தொடர்பான கதை. எனது அப்பாவாக ஜெயபிரகாஷ் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சுவாதி […]

Continue Reading

கலையரசன் தங்கையின் உயர் படிப்பு கனவு

கலையரசன் – சாதனா டைட்டஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எய்தவன்’. சக்தி ராஜன் இயக்கியுள்ள இப்படத்தை பிரண்ட்ஸ் பெஸ்ட்டிவெல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆடுகளம் நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சவுமியா, ராதா உள்பட பலரும் நடித்திருக்கும் இப்படத்தில், தற்போதைய முக்கிய பிரச்சனையான மருத்துவத்தை படிக்க சென்று, அதனால் பாதிக்கப்படும் 16 பேரை மையமாக வைத்து கதை நகர்கிறது. அந்த சம்பவத்தால் பாதிக்கப்படும் அனைவரும், அதிலிருந்து தப்பவே முயற்சி செய்கிறார்கள். அதில் ஒருவர் […]

Continue Reading

நடந்தது உண்மை தான், ஆனால் அப்படி நடக்கவில்லை : காமெடி நடிகர் விவேக்

காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த செய்தி வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை ரொம்பவும் கவர்ந்துள்ளதாகவும், அந்த வாட்சின் அழகைப் பார்த்து வியந்துபோன விவேக், என்றாவது தானும் அதுபோன்ற ஒரு […]

Continue Reading

கருப்பு ராஜா வெள்ளை ராஜாவுக்கு எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷாலும், கார்த்தியும் கைகோர்த்திருக்கும் படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். கதாநாயகியாக ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ள சாயிஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகர் ஆர்யாவும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான அருண்பாண்டியன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் கதைக்கு பிரபுதேவா […]

Continue Reading

நிர்பயா வழக்கு தீர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் கருத்து

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நிர்பயாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் அவர்களது மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு திரையுலக பிரபலங்கள் […]

Continue Reading

100 சதவீத காதலில் ஜி.வி.பிரகாஷ்!

கடந்த 2011-ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைத்தன்யா-தமன்னா நடிப்பில் வெளியாகி, வசூல் வேட்டை செய்த படம் ‘100% லவ்’. இப்படத்தை தெலுங்கில் பி.சுகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுகிறார். இப்படத்தை எம்.எம்.சந்திரமௌலி என்பவர் இயக்குகிறார். இவர் பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரெட் மார்பியிடம் பணியாற்றியவர். தெலுங்கில் இயக்கிய சுகுமார் கிரியேட்டிவ் சினிமாஸ் NY சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். NJ […]

Continue Reading