“பயணிகள் கவனிக்கவும்” படத்தில் கவனிக்க வைத்த கருணாகரன் !

நகைச்சுவை , குணசித்திரம் என இரண்டிலும் ஜொலிப்பவர்கள் தமிழ் சினிமாவில் அரிது. அந்த வகையில் இரண்டிலும் தன் திறமையை நிரூபித்து பாராட்டு பெற்றவர் நடிகர் கருணாகரன்.  கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல பாத்திரங்களில் அசத்தலான நடிப்பை வழங்கி ரசிகர்களிடம் தனக்கென தனித்த ஒரு இடத்தை பெற்றிருக்கிறார்.  சமீபத்தில் வெளியான ‘பயணிகள் கவனிக்கவும்’ அவரது கதாப்பாத்திரம் அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இது குறித்து நடிகர் கருணாகரன் கூறியதாவது… நடிப்பில் அடுத்தடுத்து  வரவிருக்கும் திரைப்படங்கள் […]

Continue Reading

”‘பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன ஓடலனா எனக்கென்ன” – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேச்சு

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.   ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இயக்கம் பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி சிவ பிரகாஷ், எடிட்டிங் நாகர் ஜி, நடனம் பாரதி, […]

Continue Reading

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து வழங்கும், விஜய் ஆண்டனி நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

நடிகர் விஜய் ஆண்டனி, தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான திரைக்கதைகள் மூலம் மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. அடுத்ததாக அவர் நடிப்பில்   வரவிருக்கும் ‘கொலை’ திரைப்படத்தில் துப்பறியும் நபராக ஒரு புதிய வித்தியாசமான பாத்திரத்தில் ரசிகர்களை  மகிழ்விக்கவுள்ளார். தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பையும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரித்திகா சிங், சந்தியா என்ற இளம் காவலராக விஜய் ஆண்டனியுடன்,இணைந்து  பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தோன்றுகிறார். பாலாஜி குமார் இயக்கியுள்ள […]

Continue Reading

சினிமா டப்பிங் யூனியனில் நடிகர் ராதாரவி செய்த ஊழல்..!

  நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர,தொழிலாளர் நலத்துறையே  மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.!!இது தொடர்பாக இன்று, சௌத் இந்தியன் சினி,டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் ( South Indian Cine Artists and Dubbing Artist Union ) உறுப்பினர்  தாசரதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவருடன் முரளிகுமார், சிஜி, மயிலைகுமார், ஜேம்ஸ், கண்ணன், மதி மற்றும் சுதா ஆகிய உறுப்பினர்கள் இருந்தனர்.   அதில் பேசப்பட்டதாவது:   டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தில் […]

Continue Reading

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த […]

Continue Reading

ரசிகர்களை கிரங்கடிக்க வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் !

OTT  தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன,  ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன.  அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், ‘அம்முச்சி’ என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு […]

Continue Reading

ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதாநாயகர்களை சரமாரியாக கேள்விகேட்ட தயாரிப்பாளர் K.ராஜன்

நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” என்று பெயர் வைத்துள்ளனர்.நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. படக்குழு உள்பட விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியதாவது, “இப்படியொரு அருமையான விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. […]

Continue Reading

“குருப்” படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா மகிழ்ச்சி !

புலிமருகன், லூசிபர்,படத்துக்கு பிறகு குருப் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் ஆர்.பி பாலா கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளியுமான “குருப்” பின் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குருப்”. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு அசைவும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மொழி […]

Continue Reading

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கும் படம் ‘அயோத்தி’

பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். ‘அயோத்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று மந்திர மூர்த்தி கூறினார். படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், “எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு […]

Continue Reading

இசை நிறுவனம் தொடங்கியுள்ள சுந்தர் சி-19 தயாரிப்பாளர், சாதனா சர்கம் பாடிய முதல் பாடல் வெளியீடு

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் 19-வது திரைப்படத்தை தயாரிக்கும் வி ஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி, வோனி மியூசிக் என்ற இசை ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் பாடலை வெளியிட்டுள்ளது. ஷீரடி சாய்பாபா மீதான இந்த பாடலை பிரபல பாடகி சாதனா சர்கம் பாடியுள்ளார். ஜெகனின் வரிகளுக்கு விக்னேஷ்வர் கல்யாணராமன் பக்தி மணம் கமழ இசை அமைத்துள்ளார். இந்தி பதிப்பின் பாடல்வரிகளை ரிஷிகேஷ் பாதக் இயற்றியுள்ளார்.கவல் தொழில்நுட்ப சேவைகள், கட்டுமானம், மின்னணு மற்றும் சட்டம் உள்ளிட்ட […]

Continue Reading