இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’.

‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கிறது. ‘விடியும் முன்’ புகழ் பாலாஜி கே குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வரை கண்டிராத கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி இந்த படத்தில் தோன்றுகிறார்.இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் பங்குதாரர்களான கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா மற்றும் விக்ரம் குமார், ஆகியோர் தொடர்ச்சியாக படங்களை விஜய் […]

Continue Reading

சங்க உறுப்பினர்களின் நலனுக்கான தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் நிர்வாகிகள் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் சந்தித்தனர்.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் நடந்த இந்த சந்திப்பில் யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ்,இணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் அமைச்சரைச் சந்தித்து சங்கத்தின் நலன் சார்ந்த 5 கோரிக்கைகளுடன் கூடிய மனுவை அளித்தனர். அந்த கோரிக்கைகளை படித்து பரிசீலித்த அமைச்சர் அடுத்த ஒரு மாதத்துக்குள் அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முன்னதாக கடந்த வெள்ளியன்று தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், பொருளாளர் இரா.குமரேசன் சந்தித்து மேற்படி […]

Continue Reading

நடிகர் ரஹ்மானுக்காக விட்டுக் கொடுத்த ராதிகா !

நடிகர் ரஹ்மான் மலையாளத்தில் ஹீரோவாக நடித்து வரும் படம் சமாறா. இப்படத்தின் படபிடிப்பு முடிந்து, ரஹ்மான் தவிர அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள். கேரளாவில் கொரோனா அதிகம் இருப்பதால் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழ்நிலை. தீபாவளி சமயம் என்பதால் சென்னையில் அனைத்து ஸ்டுடியோவும் பிசியாக உள்ளது.இதை கேள்விபட்ட ராதிகா, தனது ராடன் டப்பிங் தியேட்டரில் வந்து டப்பிங் செய்து கொள்ளுமாறு ரஹ்மானுக்கு உதவினார். பொதுவாக ராடன் தயாரிக்கும் படம் அல்லது டிவி சீரியல் டப்பிங் […]

Continue Reading

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்

நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டவரும், ஒற்றைப் பனைமரம், சிப்பாய் ஆகிய படங்களை தயாரித்து வருபவருமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே திரைப் படங்களின் இயக்குனர் மு.மாறன், நிர்வாக தயாரிப்பாளர் & மக்கள் தொடர்பாளர் இரா.குமரேசன், நிர்வாக கன்ட்ரோலர் கே.எஸ்.சங்கர் ஆகியோர் நேரில் சென்று எஸ்.தணிகைவேல் அவர்களுக்கு மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். எஸ்.தணிகைவேல் […]

Continue Reading

இதுவரை நடிக்காத வேடத்தில் ‘யோகி பாபு’! காமெடி சரவெடியாக உருவாகி வரும் ‘வீரப்பனின் கஜானா’

யோகி பாபுவை யூடியூபராக களம் இறக்கும் ‘வீரப்பனின் கஜானா’ தலைப்பு மூலமாகவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படத்தின் மற்றொரு புதிய தகவலால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.இப்படத்தில் யோகி பாபு இதுவரை […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், காதல் மற்றும் காமெடி படமான டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகனும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் போன்ற முக்கிய திரை நட்சத்திரங்களும் இதில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இப்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது.  அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், இயக்குனர் உட்பட […]

Continue Reading

சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஷெரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஷெரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படத்தின் கதையின் நாயகியான நடிகை சன்னிலியோன் மற்றும் இயக்குனர் ஸ்ரீஜித் இருவரும் இணைந்து அறிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்,’ ஷெரோ, ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். விடுமுறையை கழிப்பதற்காக […]

Continue Reading

“காசே தான் கடவுளடா”  படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது !

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில்,  இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில்  உருவாகும் கிளாசிக் காமெடி படமான,   “காசே தான் கடவுளடா”  படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது ! இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு, இன்று ( 2021 ஜூலை 16) திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா […]

Continue Reading

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்!!!!!!!

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!!!!!   இங்கிலாந்தில் இருந்து 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி     நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது.வரி […]

Continue Reading

வெளியானது “நவரசா” முதல் பாடல் !

  சினிமா ஆளுமைகள் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும், இந்த வருடத்தில் ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும், Netflix நிறுவனத்தின் “நவரசா” ஆந்தாலஜி படத்திலிருந்து, அழகான முதல் பாடலை வெளியிட்டிருக்கிறது Think Music நிறுவனம். இப்பாடல் 2021 ஜூலை 12 திங்கள் மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. “தூரிகா” எனும் மென் மெலடி காதல் பாடலான, இப்பாடலுக்கு இசையமைப்பாளர் கார்த்திக் இசையமைத்துள்ளார். பிரபல கவிஞர் மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். நடிகர் சூர்யா, […]

Continue Reading