காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மனதில் கவலையும் மகிழ்ச்சியும் கலந்து கிடக்கிறது. கவலை- கொரொனா வைரசின் கொடூரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விரைவில் உலகம் நிம்மதி அடையவேண்டும்.
மகிழ்ச்சி- காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப் பட்ட மண்டலமாக அறிவிக்கப் பட்டு இருப்பது. தமிழக முதல்வருக்கும்,அரசுக்கும் நன்றிகள் என அதில் பதிவிட்டுள்ளார்.