அறிமுக இயக்குனர் ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘இரட்டை’. இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆகியோரின் கதையை சொல்லும் இப்படம் பல சஸ்பென்ஸ்களை மறைத்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் என்ற பெருமையை இரட்டா பெற்றுள்ளது. சஸ்பென்ஸ் காட்சிகள் மற்றும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் கொண்ட இப்படம் பிப்ரவரி 17 முதல் கேரளாவுக்கு வெளியே வெளியாகிறது.
மற்ற படங்களில் இருந்து ‘இரட்டா’ வித்தியாசமானது, இதுவரை நாம் பார்த்த போலீஸ் கதையோ, காவல் நிலையம் சார்ந்த படமோ இது இல்லை. இப்படத்தின் கதாநாயகியாக தமிழ் – மலையாள நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தை ஜோஜு ஜார்ஜின் அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜோஜு ஜார்ஜைப் பற்றி சொல்லவே வேண்டாம், அவர் தனது கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கும் நடிகர். சில தமிழ் படங்களிலும் இவர் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ஜோஜு ஜார்ஜின் கேரியரில் ‘இரட்டா’ படம் இன்னொரு திருப்புமுனை என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘இரட்டா’ படத்தின் ஒளிப்பதிவை சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோருடன் ஒளிப்பதிவுத் துறையில் பணியாற்றிய விஜய் கையாண்டுள்ளார். அன்வர் அலியின் பாடல் வரிகளுக்கு ஜேக்ஸ் பிஜோ இசையமைத்துள்ளார், இவர் ரசிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். மனு ஆண்டனி இப்படத்திற்கு எடிட்டராக பணியாற்றி உள்ளார். கலை திலீப் நாத், ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒப்பனை ரோனெக்ஸ். சங்கதானம் கே ராஜசேகர், மார்க்கெட்டிங் & மீடியா பிளான் அப்ஸ்குரா.