நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திரன், இயக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிரமாண்ட செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது!!

cinema news
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.
1980 களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான  டிராமா திரில்லராக இத்திரைப்படம் உருவாகிறது.

1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது சிறுமலையின் காட்டுப்பகுதியில் ஒரு பழமையான கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி நாயகி பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் பங்கு கொண்டு நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு –  விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, கலை இயக்கம் டைரக்டர் – உதயகுமார், ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர் மக்கள் தொடர்பு – சதீஷ் AIM ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.