full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காஜல் அகர்வாலின் திருமணத்தில் மாற்றம்

தமிழில் பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. கவுதம் என்ற தொழில் அதிபரை மணக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 30-ந் தேதி மும்பையில் நடக்கிறது.

திருமணத்தை அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்த காஜல் அகர்வால் விரும்பினார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் தன்னுடன் நடித்த கதாநாயகர்கள் மற்றும் நடிகைகளை அழைக்கவும் முடிவு செய்து இருந்தார். ஆனால் கொரோனா பரவல் குறையாததால் அந்த முடிவை மாற்றி ஓட்டலுக்கு பதிலாக மும்பையில் உள்ள தனது வீட்டிலேயே எளிமையாக திருமணம் செய்துகொள்கிறார்.

நடிகர், நடிகைகளை திருமணத்துக்கு அழைப்பதையும் தவிர்த்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். அவர்களும் திருமணத்துக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருமணத்துக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று கொரோனா பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.