இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
தற்போது, சசி இயக்கும் புதிய படம் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் குமார், சித்தார்த் இணைந்து நடிக்கின்றனர். சித்துக்குமார் இசையமைக்கும் இதற்கு பிரசன்னா.கே.குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகுகிறதாம்.
இதனை ‘அபிஷேக் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஜி.வி.பிரகாஷே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.