full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் #NatpeThunai Challenge..!!

சுந்தர்.சி. தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் செய்திகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது அனைவரும் அறிந்ததே.

தற்போது, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது : –

ஒவ்வொரு நண்பர் குழுவில் கேளிக்கை செய்யக் கூடிய நபர் ஒருவர் இருப்பார். அது மாதிரி நபர்களின் வேடிக்கை நடனக் காணொளியை #NatpeThunaiChallenge முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எங்களின் அடுத்தடுத்தக் காணொளியில் இடம் பெறுவார்கள்.

இவ்வாறு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தெரிவித்தார்.