full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இந்தியன் -2வில் கமலுடன் இணையும் பிரபல நடிகர்..!!

கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் ‘இந்தியன்’. ‌ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், கமல்ஹாசன் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி வேணு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 
 
கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ படம் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‌ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால், ரிலீசுக்குப் பிறகு இதன் வேலைகள் தொடங்க இருக்கின்றன. காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அக்‌‌ஷய் குமார் வில்லனாக நடிக்கலாம் என்றும் செய்தி வருகிறது. 
 
இந்நிலையில் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் ஏற்கனவே தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ படங்களில் நடித்துள்ளார்.