அதிநவீன தொழில்நுட்பத்தில் சிவசக்தி சினிமாஸ்!

General News
0
(0)

சென்னை பாடியில் நல்ல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் திரையரங்கம் சிவசக்தி சினிமாஸ். தற்போது மேலும் அதிநவீன தொழில்நுட்பமான RGB Laser தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறது. இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கும் 3வது திரையரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். மேலும் லேசர் தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்ட குப்பத்து ராஜா, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் ட்ரைலர்களை பார்த்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பல வகையான ப்ரஜக்‌ஷன்களை பார்த்திருக்கிறோம், இங்கு புது வகையான ஒரு லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் படூர் ரமேஷ். அவர் தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக மாறிக் கொண்டிருக்கிறார். பல தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். இதில் படங்கள் மிக துல்லியமாக தெரிகிறது என்றார் ரோகிணி பன்னீர் செல்வம்.

இந்த திரையரங்கில் பொறுத்தியிருப்பது லேசர் ப்ரொஜெக்டர். க்ரிஷ்டி RGB லேசர் ப்ரொஜெக்டரான இதை முதலில் வெற்றி திரையரங்கில் தான் பொறுத்தினோம். மக்கள் நல்ல வரவேற்வை அளித்தார்கள். இந்த புரொஜெக்டர் விலை மிகவும் அதிகம், ஆனாலும் படூர் ரமேஷ் அண்ணன் இந்த பகுதி மக்களுக்காக இதை செய்ய முன்வந்திருக்கிறார். மக்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை கொடுக்கும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது. நாங்கள் மலேசியாவில் நல்ல சேவையை செய்து வருகிறோம், இந்தியாவிலும் எங்கள் சேவையை தொடர இருக்கிறோம். எல்லா திரையரங்க உரிமையாளர்களும் எங்களுக்கு நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள் என்றார் TSR Films டத்தோ ராமசாமி.

தமிழ் சினிமா எப்போதும் புது தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. 2கே, டால்பி அட்மாஸ், 4கே தொழில்நுட்பங்களை தொடர்ந்து இப்போது லேசர் 4கே தொழில்நுட்பத்தை அமல்படுத்தியிருகிறார்கள். ரசிகர்கள் மகிழ்ச்சியாக, நல்ல அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய செலவு செய்த ரமேஷ் சாருக்கு நன்றி என்றார் டால்பி இந்தியா ராஜ் வர்தாக்.

ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் இங்கு வந்திருக்கிறோம். கிட்டதட்ட 1.5 கோடி ரூபாய் செலவு செய்து, ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க பெரிய முயற்சியை செய்திருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் அமல்படுத்தியிருக்கும் 3வது திரையரங்கு என்று சொன்னார்கள், அதிர்ஷ்டவசமாக 3 திரையரங்கங்களும் நம் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் இருப்பது நமக்கு பெருமை. அடுத்த வாரம் இந்த திரையங்கில் என் படமும் வெளியாக இருக்கிறது, அதை உங்களோடு சேர்ந்து பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன் என்றார்
ஹரீஷ் கல்யாண்.

இந்த திரையரங்கிற்கு முதன்முறையாக வருகிறேன், மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். இங்கு வந்து இந்த ஏரியா லோக்கல் பசங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குப்பத்து ராஜா டீசர் நேற்று தான் வெளியானது. அதை ரசிகர்களுடன் இணைந்து இன்று பார்ப்பது மகிழ்ச்சி. திரையரங்கு உரிமையாளர்கள் நன்றாக இருந்தால் தான் நாங்களும், சினிமாவும் நன்றாக இருக்க முடியும். அடுத்த வாரம் வெளியாகும் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்துக்கும் வாழ்த்துக்கள் என்றார் ஜிவி பிரகாஷ் குமார்.

இந்த நிகழ்வில் இளம்பூரணன் சேகர், டதின் இந்திரா, வெங்கட்ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.