full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

Chennaiyil Jallikattu 2018 Press Meet Stills

[ngg_images source=”galleries” container_ids=”362″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

பூர்விகா ஜல்லிக்கட்டு சென்னையில்  

தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றது.

அதற்க்கு முதல்கட்டமாக தற்போது சென்னையில் தமிழர்களின் பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ்நாடுஜல்லிக்கட்டு பேரவை’ மற்றும் ‘சென்னை  ஜல்லிக்கட்டு அமைப்பு’ இணைந்து வருகின்ற ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைதலைவர் டாக்டர் P. ராஜசேகர் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை நடத்த உள்ளது.இந்த நிகழ்வை NOISE & GRAINS நிறுவனம் ஒருங்கிணைப்பு செய்கின்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவாட்டங்களில் இருந்து பல நூறு  மாடுபிடி வீரர்களையும் சுமார் ஐநூறு  மாடுகளையும் வரவழைத்து அவர்களுக்குவேண்டிய வசதிகளை மிக பாதுகாப்பான முறையில் செய்து ஆயிரக்கணக்கானோர் பார்க்க கூடிய வகையில் பாதுகாப்புடன் அரங்கம்அமைக்கப்பட உள்ளது.

விதிமுறை :

பங்குபெறும் மாடுகள் ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு ஐந்து சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர்.

ஒளிபரப்பு :

இந்நிகழ்ச்சி நடைப்பெற்று சில நாட்களில் மாட்டு பொங்கல் அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பவுள்ளது. இந்நிகழ்ச்சியை நடத்தஉறுதுணையாக இருக்கும்  பூர்விகா மொபைல்ஸ், அணில் உணவுகள் மற்றும் சூரியன் பண்பலைக்கு நன்றிகள்.

நோக்கம் :

நம்முடைய வீர விளையாட்டினை இவ்வுலகம் அறியவும் நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் அடுத்த  தலைமுறை அறிந்து கொள்ளும்நோக்கத்தில் இந்நிகழ்ச்சியினை பெருமையோடு ஏற்பாடு செய்கிறோம்.

பூர்விகா ஜல்லிக்கட்டு சென்னையில்.