full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சிக்லெட்ஸ் திரைவிமர்சனம்

சிக்லெட்ஸ் திரைவிமர்சனம்

இன்றைய இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் போரை மிக எதார்த்தமாக ஜெனரஞ்சமாக கொஞ்சம் கவர்ச்சியாக அனைவரையும் குறிப்பாக இளைஞர்களுக்கு விருந்தும் உண்டு அதே சமயத்தில் ஒரு நல்ல ப்பாடமும் உண்டு என்று சொல்ல கூடிய ஒரு படம் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியிருக்கும் படம் தான் சிக்லெட்ஸ்

முத்து இயக்கத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், மனோபாலா, ஜேக் ராபின்சன், அம்ரிதா, மஞ்சிரா, ராஜ கோபால் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் சிக்லெட்ஸ்.

ஒளிப்பதிவை கொளஞ்சிகுமார் கவனித்திருக்கிறார். பால முரளி பாலு இசையமைத்திருக்கிறார்.

கதைக்குள் பார்ப்போம் …

நயன் கரிஷ்மா, அம்ரிதா, மஞ்சிரா மூவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இவர்களின் பெற்றோர்களான சுரேகா வாணி, ஸ்ரீமன் உள்ளிட்டவர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பள்ளி படிப்பை முடித்த மூன்று நண்பர்களும், கல்லூரிக்குச் செல்லவிருக்கின்றனர். இந்த சூழலில் தனக்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ள, உல்லாசமாக இருக்க நினைக்கின்றனர்.

தங்களது மூன்று ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்ல திட்டமிடுகின்றனர் மூவரும்.

தங்களது பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு மூவரும் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க பயணப்படுகின்றனர்.

உண்மை அறிந்து அவர்களை காப்பாற்ற பின் தொடர்கின்றனர் பெற்றோர்கள்.

இறுதியில் எண்ண நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஹீரோ என்றால் அது கதை தான். மிக அழகான கதையை அழகாக நகர்த்திச் சென்று அதில் வென்று காட்டியிருக்கிறார் இயக்குனர் முத்து.

நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை மிக அழகாக செய்து முடித்திருக்கின்றனர்.

நாயகன் சாத்விக் வர்மா, இதற்கு முன் கேஜிஎப் சலார் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மிக நீளமான வசனத்தை பேசி தான் ஒரு நடிகன் என்பதை முத்திரை பதித்துவிட்டார்.

நாயகிகள் மூவரும் அழகாக வந்து, தங்களது நடிப்பை அளவோடு கொடுத்துச் சென்றுவிட்டனர்.

ஸ்ரீமனின் நடிப்பு எப்போதும் நம்மை ஆச்சர்யப்படுத்துவார் அதை இந்த படத்திலும் செய்துள்ளார்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக வந்து நின்றது.

முதல் பாதி கிளுகிளுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதி கருத்துடன் பயணிப்பதால் படம் நன்றாகவே கவனிக்க வைக்கிறது. இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இருப்பது கூடுதல் பலம்.

இயக்குனருக்கு மிக பெரிய வாழ்த்துகள்

மொத்தத்தில்,

சிக்லெட்ஸ் – கவர்ச்சியும் கண்ணியமும்

சிக்லெட்ஸ் – திரைவிமர்சனம்