full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘மீ டூ’ பற்றி சர்ச்சை பேச்சு சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். நடிகைகள் மீ டூவில் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்ன பிறகு இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலமானது. இந்த நிலையில் சக்திமான் தொடரில் நடித்து பிரபலமான முகேஷ் கன்னா மீ டூ இயக்கம் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். வீட்டை பார்த்துக்கொள்வதுதான் பெண்களின் வேலை. அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை உருவானது. ஆண்களுக்கு நிகராக நடக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் பேசி உள்ளார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முகேஷ் கன்னாவுக்கு அறிவு இல்லை. இதுபோன்ற ஆணாதிக்க கருத்தை கேட்டதே இல்லை. உங்களை போன்றவர்களால்தான் மீ டூ இயக்கம் உருவானது. பெண் கடவுளை வழிபட இவருக்கு உரிமை கிடையாது என்றெல்லாம் பலரும் கண்டித்து வருகிறார்கள்.

பாடகி சின்மயி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை வந்ததாக முகேஷ் கன்னா கூறியிருக்கிறார். ஆண்கள் தங்கள் கைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் வரவில்லையாம். இவரை போன்ற மனநிலை உடையவர்களால் எனக்கு சோர்வு வருகிறது. இவர்கள் மாறப்போவது இல்லை. நச்சுக்கருத்தை தங்களுக்குள் வைத்துக்கொள்ளப்போவதும் இல்லை” என்று கண்டித்துள்ளார்.