full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது

மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், சியூ ஸூன் வெளியாகவுள்ளது.புத்தம் புதிய, பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி, அமேசான் அசல் தயாரிப்புகள், அமேசான் ப்ரைம் மியூஸிக் மூலம் விளம்பரமில்லை இசை, பல்வேறு வகையான பொருட்களின் வேகமான, இலவச டெலிவரி, முன்னதாகவே கிடைக்கும் அட்டகாசமான தள்ளுபடிகள், ப்ரைம் ரீடிங்கோட அளவில்லா வாசிப்பு மற்றும் ப்ரைம் கேமிங்கோடு மொபைலில் விளையாட்டு என அனைத்தும் மாதம் வெறும் ரூ.129க்கு தரும் அமேசான் ப்ரைம், கொடுக்கும் பணத்துக்கு பெரும் மதிப்பைத் தருகிறது.

அதிதி ராவ் ஹைதரி, ஜெயசூர்யா நடிப்பில் சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தின் வெற்றிகரமான உலகளாவிய வெளியீடுக்குப் பிறகு, சியூ ஸூன் மலையாளத் திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.மஹேஷ் நாராயண் (டேக் ஆஃப்) இயக்கி, படத்தொகுப்பு செய்திருக்கும் இது, ஒரு பரபரப்பான கதையம்சம் உள்ள படம். இதில் சூப்பர் ஸ்டார் ஃபஹத் ஃபாஸில் (டேக் ஆஃப், கும்பளாங்கி நைட்ஸ்), ரோஷன் மேத்யூ (கூடே, தி எல்டர் ஒன்), தர்ஷனா ராஜேந்திரன் (கவண், வைரஸ்) ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளரை, அவரது குடும்பம், துபாயிலிருக்கும் அவரது உறவினரின் மனைவியைத் தேடும் வேலையைக் கொடுக்கிறது. அந்த மனைவியோ தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு காணொலிக் குறிப்பைப் பகிர்ந்து விட்டு மாயமாகியுள்ளார். ஊரடங்கின் போது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் மொபைல் ஃபோனில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் என்ற தனித்துவச் சிறப்பு இந்தப் படத்துக்கு உள்ளது. செப்டம்பர் 1 முதல், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், இந்தியா மற்றும் 200 தேசங்களில் இருக்கும் ப்ரைம் உறுப்பினர்கள் இந்தப் படத்தை ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். “பல்வேறு மொழிகளில், தனித்துவமான வகையில் புத்தம் புதிய பொழுதுபோக்கை வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சூஃபியும் சுஜாதையும், ட்ரான்ஸ், லூஸிஃபர் மற்றும் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களின் வெளியீட்டோடு நாங்கள் பெரும் வெற்றியை ருசித்திருக்கிறோம்.

ஃபஹத் ஃபாசில் என்றாலே சுவாரசியமான திரைப்படங்களில் நடிப்பவர். ஒரு பரீட்சார்த்த முயற்சியாக அவர் இயக்குநர் மஹேஷ் நாராயணுடன் இணைந்து எடுத்திருக்கும் திரைப்படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இன்னும் சில நாட்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சியூ ஸூன் வெளியீட்டோடு சேர்த்து இந்த பண்டிகை காலத்துக்கு இன்னும் கொஞ்சம் இனிமையைச் சேர்ப்போம் என நம்புகிறோம்” என்கிறார் அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியா பிரிவின், இயக்குநர் மற்றும் தலைவர் (content) விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார். ” மஹேஷுடன் பணியாற்றுவது எப்போதுமே ஊக்கம் தரும் அனுபவம். டேக் ஆஃப் திரைப்படத்தில் பணியாற்றும் போது அற்புதமான காலமாக இருந்தது. சியூ ஸூன் திரைப்படத்தின் உருவாக்கம் மிகச் சுவாரசியமானதாக, உற்சாகமானதாக இருந்தது. முழு திரைப்படத்தையும் ஊரடங்கு நேரத்தில் படம் பிடித்துள்ளோம். இது போன்ற காலகட்டத்தில் ரசிகர்களை சுவாரசியப்படுத்தும், பொழுதுபோக்கும் நல்ல படைப்பைத் தர முடிவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து, ரசித்து, இந்தப் படத்தின் மீதான அவர்கள் அன்பைப் பகிர்வார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஃபஹத் ஃபாசில்.”சியூ ஸூன் கணினித் திரையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு த்ரில்லர் திரைப்படம். இந்திய சினிமாவில் கையாளப்படாத ஒரு புதிய கரு இது. முன்னெப்போதும் இல்லாத இந்த நெருக்கடி காலகட்டத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொழில்நுட்பம் மூலமாக இணைப்பில் இருக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இந்த கருவை இன்னும் ஒரு படி முனே கொண்டு போய், பல்வேறு கருவிகளின் திரைகள் வழியாகக் கதை சொல்லும் தனித்துவ முயற்சியை நாங்கள் செய்திருக்கிறோம்.மெய்நிகர் தொடர்பு மென்பொருள்கள் இன்றி அதை உருவாக்கியவர்கள் இல்லாமல், இது போன்ற ஒரு திரைப்படம் சாத்தியப்பட்டிருக்காது. இந்த காலகட்டத்தில் பல கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை உணர இந்தத் திரைப்படம் ஊக்கம் தரும் என்றும், இந்த சவாலான சூழலை வாய்ப்பாக மாற்றி, புது வகையான கதை சொல்லும் வடிவத்தை இனம் கண்டுகொள்வார்கள் என்றும் நம்புகிறேன். சியூ ஸூன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ மூலமாக சர்வதேச அளவில் வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி”

என்கிறார் படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயண். ப்ரைம் வீடியோ பட்டியலில் இருக்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் சியூ ஸூனும் சேரவுள்ளது. இதில் குலாபோ சிதாபோ, ஷகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, ஃப்ரெஞ்சு பிரியாணி, சூஃபியும் சுஜாதையும் மற்றும் பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்களோடு, அமேசான் இந்தியாவில் தயாரித்திருக்கும் தொடர்களான பாண்டிஷ் பாண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு தி ஷேடோஸ், பாதாள் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமலி மேன், இன்ஸைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகியவையும், விருதும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கும் சர்வதேச அமேசான் தயாரிப்புத் தொடர்களான ஜாக் ரயன், தி பாய்ஸ், ஹண்ட்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வலஸ் மிஸஸ் மைஸல் ஆகியவையும் அடங்கும். இவை அனைத்தும் அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்குக் கூடுதலாக எந்தக் கட்டணமும் இன்றி கிடைக்கிறது. அமேசான் ப்ரைம் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் வங்காள மொழிகளில் பல்வேறு படைப்புகள் காணக் கிடைக்கின்றன. ஸ்மார்ட் டிவி, மொபைல் கருவிகள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்ஸ், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ப்ரைம் வீடியோ செயலி இருக்கும் எந்தக் கருவியிலும், எந்த நேரத்திலும் ப்ரைம் உறுப்பினர்கள் சியூ ஸூன் திரைப்படத்தைப் பார்க்கலாம். மொபைல் கருவிகள் மற்றும் டேப்ளெட்டுகளில் ப்ரைம் வீடியோ செயலி இருந்தால் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதல் கட்டணமின்றி தேவையானவற்றைப் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம். இந்தியாவில் ப்ரைம் வீடியோ சேவை, ப்ரைம் உறுப்பினர்களுக்கு வருடம் ரூ.999க்கும் அல்லது மாதம் ரூ.129க்கும் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ள, 30 நாட்கள் சோதனையோட்டத்துக்கான சந்தா செலுத்த பின் வரும் இணைப்பைத் தொடரவும் www.amazon.in/prime

அமேசான் பிரைம் வீடியோ குறித்து:
பல்வேறு விருதுகளை வென்ற, அமேசான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும் ப்ரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை ப்ரைம் வீடியோ ஆகும். மேலும் தெரிந்து கொள்ள PrimeVideo.com தளத்தைப் பார்க்கவும். ப்ரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: ப்ரைம் வீடியோ பட்டியலில் இருக்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் சியூ ஸூனும் சேரவுள்ளது. இதில் குலாபோ சிதாபோ, ஷகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, ஃப்ரெஞ்சு பிரியாணி, சூஃபியும் சுஜாதையும் மற்றும் பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்களோடு, அமேசான் இந்தியாவில் தயாரித்திருக்கும் தொடர்களான பாண்டிஷ் பாண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு தி ஷேடோஸ், பாதாள் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமலி மேன், இன்ஸைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகியவையும், விருதும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கும் சர்வதேச அமேசான் தயாரிப்புத் தொடர்களான ஜாக் ரயன், தி பாய்ஸ், ஹண்ட்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வலஸ் மிஸஸ் மைஸல் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் வங்காள மொழிகளில் பல்வேறு படைப்புகள் காணக் கிடைக்கின்றன. உடனடி அணுகுவசதி: பயனர்கள் சியூ ஸூன் படத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் ப்ரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் ப்ரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோநுகர்வோர்களுக்குக் கிடைக்கப்பெறுகிறது. ப்ரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள ப்ரைம் வீடியோ ஆப்பில், ப்ரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றிப் பார்த்து மகிழலாம்.மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDB-இன் ஆற்றலுடன், பிரத்தியேக XRay ஆக்சஸ் வழியாகப் பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லெட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.

ப்ரைம் உடன் உட்பட்டுள்ளது: ப்ரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது மாதம் ரூ.129 கட்டணத்தில் கிடைக்கப் பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30 நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.