இருமுகனின் மறுமுகம்

News
0
(0)

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் கோடிக்கணக்கில் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் நூறு கோடி கிளப்பில் லேட்டஸ்ட்டாக இணைந்த படம் ‘இருமுகன்’. இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது.

மணிரத்னம் இயக்கிய ‘ராவண்’ படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தியிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியவர் ‘சீயான் ’விக்ரம். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ‘ஐ ’படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்புத் திறமையை காட்டி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அனைத்து ஊடகங்களும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது விக்ரமுக்கு கிடைக்கும் என்று பதிவு செய்தது. இதில் உச்சமாக மும்பையிலிருந்து வெளியாகும் முன்னணி பத்திரிக்கையொன்று இவரை ‘இந்தியாவின் மெல்கிப்சன் ’என்றும் பாராட்டியது. அதைத் தொடர்ந்து விக்ரம் நடித்த படங்கள் அனைத்தும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது. அதற்கு இரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அந்த வரிசையில் தற்போது விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்த ‘இருமுகன் ’என்ற படம் ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017 ’ என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியுப்பில் வெளியானது. வெளியான நாற்பத்தெட்டு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த படத்தை லட்சகணக்கானவர்கள் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம் ’,‘ஸ்கெட்ச் ’ மற்றும் ‘சாமி 2 ’ஆகிய படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு உலகளவில் ஏற்பட்டிருக்கிறது.

இதில் துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ஸ்கெட்ச் படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். ‘சாமி 2 ’படத்தை இயக்குநர் ஹரி இயக்கவிருக்கிறார்.

இவர் தற்போது நடித்து வரும் படங்களிலும், தான் ஏற்கும் கேரக்டர்களிலும் வித்தியாசம் காட்டி நடிக்கிறார் சீயான் விக்ரம், இந்த படங்களுக்காக தன்னுடைய தோற்றத்திலும், உடல் எடையிலும் பெரிய வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவரவிருக்கிறார். இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸர் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று தொடர்ந்து சாதனை செய்து வருகிறது.

பின்னணி கலைஞர், பாடகர், சமூக அக்கறையுள்ள விசயங்களைப் பற்றிய சிங்கிள் ட்ராக் பாடலுக்கு இசையமைத்து இயக்கிய இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமையுடன் தமிழ் திரையுலகில் உலா வரும் ‘சீயான் ’விக்ரமின் கலை பங்களிப்பு தனித்துவமானது என்றே சொல்லலாம்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.