அன்புடையீர்,
தளபதி அவர்களின் 23 வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அகில இந்திய தளபதி மக்கள் இயக்க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து EX.MLA அவர்களின் அறிவறுத்தலின்படி இன்று காலை முதல் தளபதி மக்கள் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜையும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு காலை உணவும் அம்பத்தூரில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் திரு.G.பாலமுருகன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.



செங்கல்பட்டு [மேற்கு] மாவட்ட சிட்லபாக்கம் பகுதி தொண்டரணி, செம்பாக்கம் நகரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பல்லாவரம் நகரம் தொண்டரணி சார்பில் தர்கா பள்ளிவாசல் , கங்கை அம்மன், சாய் பாபா,ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிழக்கு ஒன்றிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாத்தூரில் உள்ள கருனை கண்கள் முதியோர் இல்லத்தில் உள்ள அனைத்து முதியோர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.