கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’, எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு

cinema news News
0
(0)

கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’, எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு

 

சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ – BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது.

‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன அவரும் அவரது கல்லூரி குழுவினரும் ஐந்தாவது செமஸ்டர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆவணப்படம் பற்றி பரோ சலில் கூறுகையில், “வெள்ளை சருமத்தின் மீதான விருப்பம் இந்தியர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது, தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடனான உரையாடல் மூலம், எங்கள் ஆவணப்படம் இதை ஆய்வு செய்கிறது. குறிப்பாக தமிழ் நடிகைகள் குறித்து இது பேசுகிறது,” என்றார்.

எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் இயக்கம் மற்றும் திரைக்கதை பிரிவில் BVA பட்டப்படிப்பை பரோ சலீல் படித்து வருகிறார். பெங்களூரைச் சேர்ந்தவரான இவர், விளம்பரத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி’ படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளார்.

ஆவணப்படத்திற்காக பின்வரும் நபர்களை அவர் நேர்காணல் செய்துள்ளார்:
கே. ஹரிஹரன் (தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்), நரேஷ் நில் (விளம்பரத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்), மியா மெல்சர் (சர்வதேச விருது பெற்ற நடிகை), கவிதா இம்மானுவேல் (மக்கள் தொடர்பாளர், DISB கேம்பெய்ன்), மணிசங்கர் நாராயணன்
(திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட விரிவுரையாளர்), நிலா வர்மன் (உள்ளடக்க படைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர்), ரோகினி மணி (கலைஞர்), ஹ்ருஷிகா (மாணவர், ஜேஎன்யு), மற்றும் ருத்ரேஷ் மணி ஆதிராஜ் (திரைப்பட மாணவர், FTIT).

‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி,’ படத்தின் ஒளிப்பதிவை அக்ஷய் பரூனோன் கையாள, ஆடியோகிராஃபிக்கு சுப்பிரமணிய பாரதி பொறுப்பேற்றுள்ளார். எடிட்டிங் – கோபிகிருஷ்ணன் எம், டிஐ – அருண் ராஜ் எச், போஸ்டர் டிசைனிங் – தக்ஷின் எம்.

பரோ சலில் இயக்கியுள்ள ‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி’ கேரளாவின் 16வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் (IDSFFK) போட்டி தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளை சேர்ந்த 22 ஆவணப்படங்களில் ஒன்றாகும்.

***

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.