காமெடி நடிகர் நிராகரித்த முன்னணி நடிகை

Gossips

சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்ததோடு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் கொழு கொழு நடிகை. மான் நடிகருடன் ஜோடி போட நடிகைகள் தயங்கியபோது அவரோடு ஜோடி போட்ட முதல் முன்னணி நடிகை இவர் தானாம். மான் நடிகரின் ரேஞ்ச் இப்போது எங்கேயோ போய்விட்டதாம்.

ஆனால், நடிகையோ வாய்ப்புகள் இல்லாமல் பழைய நண்பர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு வலைவீசி வருகிறாராம். அப்படி ஹீரோவாகி விட்ட முன்னாள் காமெடியனான சாண்டலுக்கும் போன் போட்டு வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். அதற்கு சாண்டல் ‘ஆல்ரெடி அண்ணன் தங்கச்சியா நடிச்சிட்டோம். ஜோடியா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுமான்னு சந்தேகமா இருக்கு. பார்க்கலாம்’ என்று பதில் சொல்லி நிராகரித்து விட்டாராம்.