நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த நீதிமன்ற கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
என்று குறிப்பிட்டு இருந்தார்
உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு சுப்பிரமணியம் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சூர்யாவின் நீட் தேர்வு குறித்த கருத்து பாரதிராஜா, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் எனவும் அவருடைய கருத்துக்கு முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் கூறினார்.
சூர்யாவின் இந்த அறிக்கையைக் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிலளித்திருக்கும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், “ரசிகர்கள் முதல்நாள் முதல் காட்சியை திரையரங்கில் கொண்டாட பேனர்கள் வைக்கிறார்கள். அந்த பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்போமா?
எந்த ஒரு லாஜிக்கும் இல்லையே. தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்கள் ஒவ்வொருநாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினமும் தேர்வு எழுதுவதைப் போலத்தான்” என்று கூறி உள்ளார்.
நீட் தேர்வு குறித்த கருத்துக்கு ஆதர்வாக நடிகர் சூர்யா ரசிகர்கள் களம் இறங்கி உள்ளனர்.#TNStandwithsurya என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.