full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தினகரன் மீது 2 போலீஸ் நிலையங்களில் புகார்

கடந்த 9-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், “சபாநாயகரும் இந்த நாட்டின் குடிமகன் தான். பேரவைக்குள் வேண்டுமானால் அவருக்கு அதிகாரம் இருக்கலாம். எம் எல் ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முன்மாதிரி தீர்ப்பு இருக்கிறது. 18 எம் எல் ஏக்களைத் தகுதி நீக்கம் செய்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தால், சபாநாயகர் தனபாலை, யார் விட்டாலும், நான் விடப்போவதில்லை.” என்று பேசியிருந்தார்.

சபாநாயகர் தனபாலை மிரட்டுவது போல தினகரன் பேசியிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் மீது 2 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபாலை, தினகரன் மரியாதைக் குறைவாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரக்கோணம் நகரக் காவல்நிலையத்தில் அதிமுக-வினர் புகார் அளித்துள்ளனர். மேலும், தினகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரக்கோணம் கிராமியக் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.