full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது

பலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.

இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:
விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல
வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொண்டாட்டங்களைத் தவிர்த்து எளிமையாக எனது கட்டில் திரைப்பட பாடல் பணிகளுக்கிடையே இன்று (20.7.2020) நடைப்பெற்றது.

இவரது இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மதன்கார்க்கி எழுதிய கட்டில் படப்பாடல் தனித்தன்மையுடன் உருவாகி எல்லோரின் மனதையும் கொள்ளையடிக்கும் என்பது உறுதி.

கொரானாவிலிருந்து மீண்டு சினிமா உட்பட உலகின் அனைத்து தொழில்களும் புதிய உற்சாகத்துடன்,
புதிய வேகத்துடன் முன்பைவிட பலமடங்கு வீரியத்துடன் விஸ்வரூபம் எடுத்து புதிய பரிமாணத்தில் பயணிக்கும் என்பது உறுதி.

இவ்வாறு இ.வி.கணேஷ்பாபு கூறினார்.