full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கொரோனாவும் சவால்தான். சீக்கிரம் வாருங்கள்- சிவகுமார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் சிவகுமார் உருக்கமாக பதிவிட்டுள்ளார்

திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர்.
தற்போது எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் குறித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:

பாலு என்னை விட நீங்கள் நாலு வயசு சின்னவர் அதனால நான் உங்களை தம்பி என்று கூப்பிடலாம் உலகமே கொண்டாடக்கூடிய ஒப்பற்ற பாடகர் நீங்க நிறைகுணம். நூத்துக்கும் மேல படங்களில் நீங்க டூயட் பாடிஇருக்கீங்க.வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்தவர் நீங்கள்.கொரோனாவும் சவால்தான்.”சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் தம்பி என தெரிவித்துள்ளார்.