full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விவேக் மைத்துனருக்கு கொரோனா

கொரோனா வைரசால் பல திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகிற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நேற்று அமிதாப்பச்சன் குடும்பத்திலுள்ள நால்வருக்கும் அனுபம்கெர் குடும்பத்தில் உள்ள நால்வருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக்கின் மைத்துனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் விவேக் கூறியுள்ளார்.

Vivekh actor
@Actor_Vivek
எனது மைத்துனர்,கொரோனாவால்) காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி,சிகிச்சை,தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி @Vijayabaskarofl @RAKRI1 @dromramesh
11:49 AM · Jul 13, 2020

இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது மைத்துனர், கொரோனாவால்) காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ இவ்வாறு நடிகர் விவேக் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.