full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கை

 

 

 

கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கை : *2020 மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை சென்னை பத்திரிகையாளர் * மன்றத்தில் செய்தியாளர் சந்திப்புகள் நிறுத்தி வைப்பு

உலகம் முழுவதும் கொரோனா (கோவிட்- 19 ) வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு ஒரே இடத்தில் கூட்டமாகச் சேர்வதைத் தவிர்க்கும் நோக்கில் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் *செய்தியாளர் சந்திப்புகள் நடத்துவது 2020 மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

 

 

 

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலன் மற்றும் குடும்பத்தினர் உடல் நலனைப் பாதுகாக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசியல் தலைவர்களின் கருத்துகள் மற்றும் அரசின் அறிவுப்புகளை தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் வெளியிடுவது குறித்து சிந்திப்பது காலத்தின் தேவை என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகிறது.

✍பாரதிதமிழன்,
இணைச் செயலாளர்,
சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
20-03-2020