full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நீதிமன்ற தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி – கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவு தொடரும் எனவும் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகரும் ஆன கமல்ஹாசன் அவர் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.என்று கமல் தெரிவித்துள்ளார்