இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிளும் பிரசித்தி பெற்றது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். இதில் மிகவும் வலுவான அணிகளாகக் கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூதாட்ட புகாரில் சிக்கி, தடை செய்யப்பட்டன.
அந்த இரு அணிகளுக்கு பதிலாக புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய புதிய அணிகள் உண்டாக்கப்பட்டன. இப்போது தடை காலகட்டம் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் என்ற அறிவிப்பு வெளிய்யகி இருக்கிறது.
மேலும் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோணியே செயல்படலாம் எனவும் தெரிகிறது. அதோடு மட்டுமில்லாமல் சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ளும் முறையின் படி மீண்டும் அணியில் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமல்லாது இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ள சென்னை அணியின் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
இந்த ஐந்து வீரர்களையும் தக்க வைக்க சென்னை அணி நிர்வாகம் 65 கோடி முதல் 75 கோடி வரை செலவிட வேண்டியிருக்குமாம்.
முக்கியம்மாக, சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்கவைக்கப் படவில்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.