இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடல்கள் சமீப காலங்களில் ரசிகர்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பல பாடல்கள் சார்ட்பஸ்டர் ஹிட்களாக மாறிய நிலையில், ‘ஆசை அலை மீறுதே’ அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது. இந்தப் பாடலுக்கு பரத் ராகவன் இசையமைத்துள்ளார், கல்பனாவின் வரிகளில் ரக்ஷிதா சுரேஷ் இப்பாடலை பாடியுள்ளார், ‘அடங்கமறு புகழ்’ ராஜா ருத்ரகோடி மற்றும் சதரூப நஹா ஆகியோர் பாடலில் முதன்மை கலைஞர்களாக இடம்பெற்றுள்ளனர். இஷான் இப்பாடலை உருவாக்கி இயக்கியுள்ளார். வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார்.
ஒரு பெண் தன் காதலன் இல்லாத தருணத்தில் அடையும் உணர்ச்சிக் கொந்தளிப்பை இந்தப் பாடல் ஆழமாகச் சொல்கிறது. காதலன் மீதான அதீத அன்பாகத் தொடங்குவது, பேரழிவு தரும் உச்சமாக மாறுகிறது. காதர் சரஸ்வதி இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் இஷான் சன் மியூசிக் மற்றும் பெப்பர்ஸ் டிவியில் விஜேவாகவும், அதன் பிறகு டியூன்ஸ் 6 இல் புரோகிராம் ஹெட் ஆகவும், LA Reach Media வில் எழுத்தாளராகவும் பயணம் செய்தவர் என்பதால், ஊடக உலகில் பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார். பின்னர், அவர் உதவி இயக்குனராக மட்டுமல்லாமல் ‘மியாவ்’ படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்தார். இவரது குறும்படங்கள் பல்வேறு விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஐஸ்வர்யா தத்தா நடித்த அவரது முந்தைய ஆல்பம் பாடலான ‘பீட்டா எத்தி’ சார்ட்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடதக்கது.