சுந்தர்சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான வேட்டைகள் ஆரம்பம் பாடல் !!

cinema news

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.  கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘வேட்டைகள் ஆரம்பம் ‘ எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது..
நவநீத் சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பா .விஜய்  பாடல்வரிகளை எழுதியுள்ளார் .பாடகர் நிவாஸ் மற்றும் நவநீத் சுந்தர் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர் .