full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

டேனி விமர்சனம்

மர்ம கொலைகளின் பின்னணியை தேடும் வரலட்சுமி – டேனி விமர்சனம்
Danny Movie review in Tami

பிஜி.முத்தையா தயாரிப்பில், எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தின் விமர்சனம்.

டேனி, டேனி விமர்சனம், வரலட்சுமி, Danny, Danny Review, Varalakshmi

தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்த ஊரில் மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க கூடும் என்று எல்லோரும் நம்பும் நிலையில், போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

கொலையாளிகளை பற்றி தீவிரமாக விசாரிக்கும் நிலையில், வரலட்சுமியின் தங்கை அனிதா சம்பத்தும் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமிக்கு கிடைக்கிறது. இறுதியில் அந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? வரலட்சுமி எப்படி கண்டு பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் மொத்த பளுவையும் தூக்கி சுமக்கிறார் நடிகை வரலட்சுமி. மிடுக்கான தோற்றத்துடனும் ரப்பான முகத்துடனும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். பாசம், கோவம் என்று நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார்.

களவாணி 2 படத்தில் வில்லனாக நடித்த துரை சுதாகர் இந்த படத்தில் போலீசாக வருகிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வினோத் கிஷனின் வில்லத்தனம் சிறப்பு.

சிறிது நேரம் மட்டுமே வரும், அனிதா சம்பத், வேலா ராமமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். துப்பறிவாளனாக வரும் டேனியை திறம்பட பயிற்சி கொடுத்திருக்கிறார். இன்னும் நிறைய காட்சிகள் வைத்திருந்தால் ரசித்திருக்கலாம்.

கிரைம் திரில்லர் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.சி.சந்தானமூர்த்தி. சொல்லவந்ததை 1 மணி நேரம் 35 நிமிடத்தில் சொல்லி அழகாக படத்தை முடித்திருக்கிறார். வரலட்சுமி மற்றும் துரை சுதாகரிடம் திறம்பட வேலை வாங்கி இருக்கிறார்.

சந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர் இசை கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனந்த்குமாரின் ஒளிப்பதி அருமை.

மொத்தத்தில் ‘டேனி’ இன்னும் வேகம் எடுத்திருக்கலாம்.