பான் இந்தியா ஸ்டார் விஜய் தேவரகொண்டா மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோரின் மிரட்டலான பான் இந்திய படமான லைகர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இது நிச்சயமாக இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும், மேலும் படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிலும் படக்குழு எதிர்பார்ப்புகளை மேலும் மேலும் அதிகமாக்கி கொண்டே போகிறது. விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் சாலா கிராஸ்பிரீட் Saala Crossbreed மிரட்டலாகவும் அசத்தலான தாக்கத்தையும் தருகிறது .
முன்னெப்போதும் இல்லாத வகையில் சினிமா அனுபவத்தை அளிக்கும் விதமாக, ரத்தம், வியர்வை, இதயம் மற்றும் ஆன்மாவை உருக்கி, இந்த மாஸ் ஆக்ஷன் எண்டெர்டெயினர் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவை அவரது அனைத்து திறமைகளையும் ஒட்டுமொத்தமாக வெளிக்காட்டும்படி, தயாரிப்பாளர்கள் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர், போஸ்டரில் அவர் கிட்டத்தட்ட நிர்வாணமான உடலமைப்பைக் காட்டியுள்ளார். இப்படி போஸ் கொடுக்க ஒருவருக்கு தைரியம் வேண்டும், விஜய் தேவரகொண்டா மிகவும் துணிச்சலானவர். தான் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தனது படங்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று இந்தச் செயலின் மூலம் அவர் காட்டியுள்ளார். துணிச்சலான கதை சொல்லலுக்காக இந்தப் படம் நீண்ட காலமாக ரசிகர்கள் நினைவில் இருக்கும்.
MMA ஃபைட்டராக நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டா உண்மையில் பெரிய உழைப்பை தந்துள்ளார். உலகம் போற்றும் லெஜண்ட் மைக் டைசன் இத்திரைப்படத்தில் ஒரு வலிமையான பாத்திரத்தில் நடித்துள்ளார். சர்வதேச அடையாளமாக விளங்கும் மைக் டைசன் உடைய பிறந்தநாள் சிறப்பு வீடியோவில், அவரது பணிவான குணமும் மற்றும் அவர் படக்குழுவுடன் நெருக்கமாக இருந்த விதமும் பலரின் இதயங்களை வென்றது.
படக்குழு சமீபத்தில் மும்பையில் பட ஜோடியின் ஒரு பாடலை பதிவுசெய்தது மற்றும் படக்குழு படத்திற்கான விளம்பரங்களைத் விரைவில் தொடங்கவுள்ளனர். அடுத்தடுத்து தொடர் அப்டேட்களுடன் வர தயாராக இருக்கின்றனர்.
விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் பன்மொழி இந்தியா திரைப்படமான ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.தொழில் நுட்ப குழு
இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha