“வட்டகரா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் K.பாரதி கண்ணன்.

News
0
(0)
கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சி ,வட்டகரா படத்தின் இயக்குனர் K.பாரதி கண்ணன் நெகிழ்ச்சி.
“வட்டகரா” படத்தின் இயக்குனர் K.பாரதி கண்ணன பேசும் போதுசினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பலரில், தற்பொழுது சிலரை அறிமுகப்படுத்துவதில் பெருமையாக உள்ளது. அந்தமானில் பல குரும்படங்களை இயக்கி பல விருதுகளை பெற்றுள்ளார். இப்போது தயாரிப்பாளர் சதீஸ் மற்றும் கார்த்திக்ராஜ் அவர்கள் மூலம் வெள்ளித்திரை சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.இக்கதையை பற்றி சதீஸ் அவர்களிடம் சொன்னபொழுது, அவருக்கு கதையின் மேல் கொண்ட ஈர்ப்பால் படப்பிடிப்பிற்கான அடுத்தக்கட்ட வேலைகளை பார்க்க ஆரம்பித்ததுடன், நான்கு நாயகர்களில் தானும் ஒரு நாயகராக நடிக்க சம்மதம் தெரிவித்தார். இது என் மீது அவர்கொண்ட நம்பிக்கையை அதிகப்படுத்தி விட்டது என்று சொல்லலாம்.First look POSTER வெளியீடு தொடர்பாக எண்ணிய தருணத்தில் இயக்குனர் திரு.கார்த்திக் சுப்பராஜ் அவர்களிடம் அனுகினோம், இந்த படத்தின் வித்தியாசமான தலைப்பும் அதற்கான போஸ்டரும் என்னை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் இந்த படத்தினை திரையில் காண்பதற்கான ஆவலும் கொண்டுள்ளதாக POSTER வெளியீட்டின் போது கூறியதும், பாராட்டியதும் எங்களுக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.வித்தியாசமான படங்கள் கொடுப்பவரின் மனதில், எங்கள் படம் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. இது எங்களின் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்தது.
சினிமாவில் புதியதொரு பயணத்தை தொடங்கிய எங்களுக்கு, இத்துறையில் அனுபவம் வாய்ந்த பல தொழில்நுட்ப வல்லுனர்கள் எங்களை வழிநடத்துவது பெருமையாக கருதுகிறோம். குறிப்பாக இசையமைப்பாளர் தாஜ்நூர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பெற்றிருக்கிறோம். அவரின் இசை படத்திற்கு மேலும் வலுசேர்த்துடன் வெற்றியையும் நிர்ணயித்துள்ளது.
ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு கொரியன் படம் அளவிற்கு காட்சிகளும், அதற்கான வண்ணங்களும் பிரம்மாண்டமாக கொடுத்துள்ளார்.
படத்தொகுப்பாளர் அமர்நாத் திரைக்கதைக்கு ஏற்ப கதையினை ஹாலியுட் அளவிற்க்கு கனகட்சிதமாக தொகுத்து வழங்கியுள்ளார்.பல வெற்றிப்படங்களுக்கு ஒளிவடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள SFX M.J.ராஜீ அவர்களுடன் கைக்கோர்த்தும் படத்தினை பற்றி அவர் பாராட்டியதையும் நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் தொழில்நுட்ப ரீதியில் ஒரு புதிய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்கள்.படத்திற்கான பாடல் வரிகளை கபிலன், சினேகன், இளையகம்பன், நிமேஸ் போன்றோர் எழுதியுள்ளனர். கபிலன் அவர்களின் பாடல் வரிகள் இன்றைய சூழ்நிலை குறித்த தத்துவப் பாடலாகவும், சினேகன் தனது அப்பாவை மனதில் கொண்டு மிகவும் உணர்வுப்பூர்வமான பாடல் எழுதியுள்ளார். அப்பாவிற்கான இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என நாங்கள் நம்புகிறோம். மற்றொரு காதல் வரிகளை இளையகம்பன் அவர்கள் எழுதியுள்ளார், இதுவரை இல்லாத நிலையில் வித்தியாசமான பேச்சில் தன் அரும்புக்காதலை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றை நிமேஸ் கொடுத்துள்ளார்.படத்தின் நாயகர்களாகிய அங்காடித்தெரு மகேஷ், சதீஷ், சரனேஷ் குமார், மற்றும் கண்ணன் மாதவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்… இதன் கதை நான்கு நபர்களை நோக்கி நகர்வதால் அனைவாரும் தங்களுக்கான நடிப்புத்திறனை அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்திற்கான அடுத்தகட்ட வேளைகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் விரைவில் உங்கள் அனைவரையும் திரையில் சந்திக்கின்றோம். என்கிறார்  இயக்குனர் K.பாரதி கண்ணன்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.