full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம்

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம்

மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் வசிக்கும், கணவன் – மனைவி மற்றும் ஒரு மகன் என சிறிய ஏழை குடும்பம்.

கணவன், கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார். மனைவி வீட்டு வேலை செய்கிறார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட ஊரே தயாராகிக்க கொண்டு இருக்கும் நேரம். , மகனின் நீண்ட நாள் விருப்பமான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை, பட்டாசு, பலகாரத்திற்கான செலவு.. இது எல்லாவற்றுக்கும் தனது போனஸ் கை கொடுக்கும் என நம்புகிறார் கணவர்.அதே பொலமனைவி கணவனுக்கு ஒரு ஹெல்மெட் வாங்கி கொடுக்க ஆசைபடுகிறாள்

ஆனால் போனஸ் கிடைத்தபாடில்லை. ஆகவே தனது நண்பன், சாலையோரம் துவங்கும் தீபாவளி துணிக்கடையில் வேலை பார்க்கிறார்.

அங்கே ஒரு அதிர்ச்சி சம்பவம்…

அதன் பிறகு என்ன ஆனதுஎன்பதே கதை.

குடும்பத்தலைவனாக விக்ராந்த் நடித்து இருக்கிறார். மனைவி, மகன் மீது காட்டும் பாசம்.. போனஸுக்காக துடிக்கும் துடிப்பு, கிடைக்காத ஏமாற்றம், திடுமென சிக்கலில் மாட்டிக்கொண்டவுடன் அதிர்ச்சி என அற்புதமாக நடித்து இருக்கிறார்.

குறிப்பாக.. காவல் நிலையத்தில் அடி உதை பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவுடன்… தனது பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து இன்ஸ்பெக்டர் மேஜை மீது வைத்து, “இது என்னுதில்லை” என்கிறாரே… சிறப்பான நடிப்பு!

அதே போல குடும்பத் தலைவியாகவே வாழ்ந்திருக்கிறார் ரித்விகா. கணவனுக்காக ஹெல்மெட் வாங்க ஆசைப்படுவது… அதற்காக ஓடோடி வருவது.. வாங்க முடியாமல் ஏமாற்றம்.. கணவனைக் காணாமல் தவிப்பு… அட.. ரித்விகாவுக்கு இது முக்கியமான படம்.

இவர்களது மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரீஷ் அசத்தி இருக்கிறார். புது உடை கிடைக்குமா, ஷூ கிடைக்குமா என ஏக்கத்தை பார்வையிலும் குரலிலும் அசாத்தியமாக வெளிப்படுத்தி இருக்கிறான். பாராட்டுகள்.

மரிய ஜெரால்டு இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. அதே போல பின்னணி இசையும் அருமை. சொல்லப்போனால், இசையும் ஒரு கதாபாத்திரமாக படத்தினூடே ஓடி வருகிறது. அபாரம்.

வழக்கமாக மதுரையின் அடையாளமாக காட்டப்படும் காட்சிகளாக இல்லாமல், இதுவரை பார்த்திராத மதுரையை கொண்டுவந்து கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர், கெளதம் சேதுராமன். அதுவும், திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அளித்த விதம் அற்புதம்.

பார்த்திவ் முருகனின் படத்தொகுப்பு கச்சிதம்.

எளிய மக்களின் வாழ்க்கையை அவர்களது அபிலாஷைகளை எதார்த்தமாக சொன்ன விதத்தில் ஜெயித்து இருக்கிறார் இயக்குநர் ஜெயபால்.ஜெ.

ஆண்டு முழுவதும் உழைத்துத் தேய்ந்தாலும், வறுமை நிலை மாறாத நிலை.. ஒரு பண்டிகையைக் கூட நிம்மதியாகக் கொண்டாட முடியாத சூழல்.. இதை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதே நேரம், இறுதியில் தன்னம்பிக்கை அளிக்கும்படியாக பாசிடிவான முடிவும் சிறப்பு!

அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம். குறிப்பாக நடுத்தர மக்கள்