அக்டோபர் பத்தில் அன்பே மருந்தென்று சொன்ன தீபிகா

News
0
(0)

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி மனநோய் பாதிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் பேரில் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா மங்களவாரபேட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் மனநோய் பாதிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரபல நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரையும் சந்தித்தார்.

அதன் பின்னர் பேசிய அவர், “மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். மனநோய் இயற்கையாக வரக்கூடிய ஒரு நோய். மன அழுத்தமே அதற்கு காரணம். யாரும் வேண்டுமென்றே மனநோயில் சிக்கிக் கொள்வது கிடையாது. மனநோயாளிகளை புறக்கணிக்கக் கூடாது. அவர்களை நாம் தான் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் மீது அதிகப்படியான அன்பை செலுத்த வேண்டும். கருணையுடன் கவனிக்க வேண்டும். எந்த ஒரு தருணத்திலும் அவர்களுடைய மனம் வேதனை அடையும் படி நடந்து கொள்ளக் கூடாது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு வரவேண்டும், அவர்கள் குணம் அடைய வேண்டும் என்று நாம் விரும்பினால் அதற்கு அன்பு ஒன்று தான் மருந்தாகும்.” என்றார்.

விழாவில் 100-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா முடிந்தவுடன் தீபிகா படுகோனே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த விழாவில் தீபிகா படுகோனேவின் தாய் உஜ்வலா, சகோதரி அனிஷா படுகோனே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.