ஏப்ரல் 14-15 விழாவில் , இணை நிறுவனர் ஏ.ஆர்.ரஹ்மான் தவிர, நம் நாட்டு நட்சத்திரங்களான சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், லியோன் ஜேம்ஸ், ஷாஷா திருப்பதி, தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் ஆகியோருடன், தெற்காசிய புலம்பெயர்ந்த கலைஞர்களான முகன் ராவ், ஷான் வின்சென்ட் டி பால் போன்ற கலைஞர்களுடன் , யங் ராஜா, Navz-47, Cartel Madras ஆகியோருடன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
யாழ் திருவிழா இணையத்தில் YouTube மற்றும் விஜய் மியூசிக்கில் ஏப்ரல் 14-15 தேதிகளில் திரையிடப்படவுள்ளது.
ஏப்ரல் 2022 -, மாஜாவின் ஆன்லைன் உலகளாவிய யாழ் திருவிழா, YouTube மற்றும் பிரபல இசை சேனலான விஜய் மியூசிக்கில் ஏப்ரல் 14 மற்றும் 15 தேதிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும், இந்த இரண்டு நாள் ஆன்லைன் திருவிழா – YouTube ல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும், மற்றும் தமிழ் இசை சேனலிலும் திரையிடப்பட உள்ளது.
ரஹ்மானுடன் இணைந்து கனடா நாட்டு தொழில்முனைவோர் நோயல் கீர்த்திராஜ், சென் சச்சி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகிய மூவரின் சிந்தனையில் உருவானதுதான் மாஜா.
முதன்மையான உலகளாவிய இசை விழாவாக முதலில் டிஜிட்டல் திருவிழாவாக கற்பனை செய்யப்பட்ட யாழின் நோக்கம், உலகெங்கிலும் உள்ள சுயாதீன கலைஞர்களை ஒன்றிணைத்து, சுதந்திர இசைக்காக தென்னிந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதாகும்.
சுதந்திரமான இசை மற்றும் கலைஞர்களை இதுவரை கண்டிராத அளவில் மற்றும் விதத்தில் காட்சிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். யாழின் நோக்கம் புதிய யோசனைகளை, நீங்கள் விரும்பும்படியான புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாகும். சிறந்த திறமையான இசைக்கலைஞர்கள் மற்றும் புதிய இசையை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் வரவிருக்கும் டிஜிட்டல் பதிப்பு ஒரு முக்கிய முதல் படியாக இருக்கும், ”என்கிறார் நோயல் கீர்த்திராஜ், CEO மற்றும் இணை நிறுவனர் மாஜா.
இந்த நிகழ்வில் முன்னணி இசையமைப்பாளர்கள் ரஹ்மான் மற்றும் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் ஷாஷா திருப்பதி, பிரவின் சைவி, சக்தி அமரன், மாளவிகா சுந்தர், டீஜே, சத்யபிரகாஷ், இசை தயாரிப்பாளர்கள் ஷான் ரோல்டன், லியோன் ஜேம்ஸ், டென்மா, கலைஞர்கள் கேபா ஜெர்மியா, முகன் ராவ், சியன்னோர். ஆலப் ராஜு, தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் மற்றும், சென்னையிலிருந்து Oorka மற்றும் Staccato போன்ற இசைக்குழுக்கள் பங்குபெறுகின்றனர்.
டிஜிட்டல் திருவிழா இரண்டு நாட்களில் மொத்தம் ஐந்து மணி நேரம் ஒளிபரப்பப்படும்.
ஒரு முதன்மையான உலகளாவிய இசை விழாவாக, தென்னிந்தியாவில் சுதந்திரமான இசைக்காக கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்க உலகம் முழுவதிலும் உள்ள சுயாதீன கலைஞர்களை யாழ் ஒன்றிணைக்கும்.
மாஜா எப்போதும் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும், அதே நேரத்தில் யாழ் எப்போதும் பெரிய எழுத்துக்களில் எழுதப்படும்.