full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“தேவராட்டம்” மே 1   முதல் !! 

ஸ்டுடியோ க்ரீன் K.E ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ,மஞ்சிமா மோகன் நடித்துள்ள  திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார் .

இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்!

கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் – முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.

நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் வெளியான பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .. சக்தி சரவணன் ஒளிப்பதிவுசெய்துள்ளார் . பிரவீன் K .L  படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார் .

மேலும் இந்த படத்தில் சூரி , வினோதினி வைத்தியநாதன் , போஸ் வெங்கட் , வேலராம மூர்த்தி , பெப்ஸி விஜயன் , சந்துரு சுஜன் , ரகு ஆதித்யா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .இந்த படம் மே 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது .